நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன?

எகிப்து: சூயஸ் கால்வாய் அடைப்பு என்பதே திட்டமிட்ட மனித சதி.. இது மனிதர்களை கடத்தி செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று வேலை என்று இணையத்தில் பலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.

உலகம் தட்டையாக இருக்கிறது.. மனிதன் நிலவுக்கே செல்லவில்லை ..கொரோனா எல்லாம் ஏமாற்று வேலை என்று உலகம் முழுக்க பல கான்ஸ்பிரசி தியரிகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. எந்த ஒரு பெரிய சம்பவம் நடந்தாலும் உடனே அதற்கு பின் பெரிய சதி இருக்கிறது.. இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பும் பாய்ஸ்கள் உலகம் முழுக்க உள்ளனர்.

அந்த வகையில் தற்போது சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கி இருப்பதை வைத்தும் முக்கியமான புரளி ஒன்றை கிளப்பி உள்ளனர். அது என்ன புரளி? கண்ணை சரி செய்து கொண்டு.. மனதை பலப்படுத்திக்கொண்டு இனி வரும் பாராக்களை படிக்கவும்!
என்ன நடந்தது

புரளி குறித்து பார்க்கும் முன் சின்ன ரீகேப்.. கடந்த சில தினங்களுக்கு முன் சூயஸ் கால்வாயில் 'எவர் கிவன்' கப்பல் தரைதட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக மோதி... தரைதட்டி மாட்டியது. இந்த 'எவர் கிவன்' கப்பல் தைவான் நிறுவனமான 'எவர் கிரீன் மெரைன்' மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

அது என்ன சூயஸ் கால்வாய்

சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள கடல் போக்குவரத்துக்கான கால்வாய் ஆகும். கிட்டத்தட்ட உலகின் 15% கடல் சரக்கு போக்குவரத்து இது வழியாகவே இருக்கிறது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா ஆசியா இடையே பயணம் மேற்கொள்ள முன்பெல்லாம் ஆப்ரிக்கா வழியே சுற்றி செல்ல வேண்டும்.

மாட்டியது

இதை மாற்றும் வகையிலேயே சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான ஷார்ட் கட் கடல்வழி பகுதியாகும் இது. இங்குதான் புயல் காற்றில் இழுத்து செல்லப்பட்டு, எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் மாட்டியது. இதில் சின்னதும், பெரியதுமாக மொத்தம் 20 ஆயிரம் கண்டெயினர்கள் உள்ளன.

சிக்கல்

இந்த சரக்கு கப்பலின் எடை அதிகமாக இருப்பதால் இதில் இருக்கும் கண்டெயினர்களை இறக்கிவிட்டு, கப்பலின் எடையை குறைத்து, பின் அந்த சரக்கு கப்பலை இழுவை கப்பல்கள் மூலம் இழுக்கும் முடிவில் உள்ளனர். இந்த கண்டெயினர்களை இந்த வாரம் கீழே இறக்க உள்ளனர்.

புரளி

தற்போது இணையத்தில் உலவி வரும் புரளியின்படி.. இந்த கப்பல் தரை தட்டியதே சதி வேலையாம். இந்த கப்பல் காரணமாக சூயஸ் கால்வாயில் மேலும் பல கப்பல்கள் காத்துகொண்டு இருக்கின்றன. 150க்கும் அதிகமான கப்பல்கள் நங்கூரத்தை போட்டு காத்துகொண்டு இருக்கின்றன. இந்த கப்பல்களில் நிறைய கண்டெயினர்கள் உள்ளது. இதில் சில கண்டெயினர்களில் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதுதான் அந்த புரளி.

மனிதர்கள்

சூயஸ் கால்வாய் அடைப்பால் காத்திருக்கும் கப்பல்களுக்குள் உள்ள கண்டெயினருக்குள் மனிதர்கள் இருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள், சிறுவர்களை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு இந்த கண்டெயினர் மூலம் கடத்துவதாக இணையத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இந்த கண்டெயினர்களை சோதனை செய்யாமல் இறக்க வேண்டும்.. அதற்காக சூயஸ் கால்வாயை அடைத்து திசை திருப்பி உள்ளனர்.

திசை திருப்பி

சூயஸ் கால்வாயை அடைத்து, அதிகாரிகள் எல்லோரையும் திசை திருப்பி, அதை பயன்படுத்தி வேறு கப்பல்கள் மூலம் எகிப்துக்குள் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களை கடத்தி செல்வதுதான் திட்டம் என்று இணையத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் இருந்து எஸ்கேப் ஆக இப்படி கால்வாயை அடைத்தனர் என்று புகாரில் கூறப்படுகிறது.. இவர்கள் எல்லாம் பாலியல் தொழிலுக்கு கடத்தப்படுவதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட இன்னொரு விஷயமும் இதோடு சேர்ந்து வைரலாகி வருகிறது (இந்த இடம்தான் திகிலானது).. இந்த புரளியின்படி.. இந்த மொத்த சூயஸ் கால்வாய் அடைப்பும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி மற்றும் 2016 அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் வேலைதான் என்றும் கூறுகிறார்கள்.

ஏன் இப்படி

கிளிண்டன் அதிபராக இருந்த போது ஹிலாரி கிளிண்டனின் கோட் நேம் என்பது எவர் கிரீன் ஆகும். இந்த கப்பலின் நிறுவனத்தின் பெயரும் எவர் கிரீன் . அதேபோல் இந்த கப்பலின் ரேடியோ பிரீகுவன்சி H3RC என்பதாகும். ஹிலாரி கிளிண்டனின் பெயரின் இனிஷியல்ஸ் என்பதும் HRC ஆகும். அதேபோல் எவர்கிரீன் நிறுவன தலைவர்களை ஹிலாரி பலமுறை சந்தித்ததாக சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொய்

இதனால் ஹிலாரிதான் மனிதர்களை கடத்துவதற்காக இப்படி சூயஸ் கால்வாயை அடைத்து மக்களை திசை திருப்புகிறார் என்று புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான ஆதாரங்கள் எதுவும் இணையத்தில் கொடுக்கப்படவில்லை . கண்ணை மூடிக்கொண்டு கதை அடித்த சிலரால் தற்போது இணையம் முழுக்க இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.. அமெரிக்காவிலேயே ஹிலாரிக்கு எதிராக பலர் இதை வைத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!