நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

வைரசால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி எளிதில் அடையாளம் காண்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கையில் முத்திரை குத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகரில் புதிய தொற்று அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களில் இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 1400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் கே.சுதாகர் அறிவித்துள்ளார். பதிய கட்டுப்பாடுகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

வைரசால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி எளிதில் அடையாளம் காண்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கையில் முத்திரை குத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட அரங்குகளில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளில் 200 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திறந்தவெளி அரங்குகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம். 

அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிக்கப்படும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதிகள் கிடைப்பது குறித்த தகவல்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம்.

மரபணு மாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருடனும் தொடர்புடைய சுமார் 20 நபர்களுக்கு தொற்று இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 400 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்