நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் ?

கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் என்பது பற்றி சிறு விளக்கம் :

ஒரு கல்லில் சிலை வடிப்பது எளிதான விஷயம் அல்ல. முறையான விரதம் இருந்து, அதற்கான கல்லினை தேர்வுச் செய்து, அந்த கல்லின் தனித்துவம் உணர்ந்து செய்ய வேண்டும்.

உழியினால் கல்லினை செதுக்கும் போது, ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் அந்த கல் முற்றிலுமாக உடைந்து விடும்.

ஆகம விதிப்படி முறையாக பூஜைகள் செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை நம்மால் உணரலாம்.

பெரும்பாலும் தெய்வச் சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது கருங்கல். 

கருங்கல் என்பது பஞ்ச பூதங்களையும் அடக்கும் தன்மையுள்ளது. இது வேறு எந்த உலோகத்திற்கும் கிடையாது.

*நீர்*

கல்லில் நீர் உள்ளது. எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

*நிலம்*

பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

*நெருப்பு*

கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

*காற்று*

கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

*ஆகாயம்*

ஆகாயத்தைப் போல் , வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. 

அபிஷேகம் அர்ச்சனை ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. 

அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல (நேர்மறை) அதிர்வுகள் உண்டாகி அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!