நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாவரங்களிலிருந்து பெறப்பட்டாலும் அது பால்தான்!' - ஐஸ்க்ரீம் விளம்பர சர்ச்சைக்கு மருத்துவர் பதில்

விலங்குகளிலிருந்து பெறப்படுவதை மட்டும்தான் `பால்' என்று குறிப்பிட வேண்டும். தாவரங்களிலிருந்து எடுக்கப்படுவதை சோயா பால், பாதாம் பால், தேங்காய்ப்பால் என்று சொல்லக் கூடாது என்றொரு சர்ச்சை கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் சுழன்றுகொண்டிருக்கிறது. 

சர்ச்சைக்குக் காரணம் ஓர் ஐஸ்க்ரீம் நிறுவனம். அது தன்னுடைய விளம்பரமொன்றில், `பத்து சதவிகித கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற எங்கள் ஐஸ்க்ரீமை மட்டும்தான் ஐஸ் க்ரீம் என்று சொல்ல வேண்டும். பால் கொழுப்புக்குப் பதிலாகத் தாவரக் கொழுப்பைச் சேர்த்து ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்கள், அதை `ஃப்ரோசன் டெசர்ட்' என்றுதான் சொல்ல வேண்டும்' என்றிருக்கிறது. விலங்குகளிடமிருந்துப் பெறப்படுவதைத்தான் `பால்' என்று சொல்ல வேண்டுமா என்று சித்த மருத்துவர் விக்ரம்குமார் அவர்களிடம் கேட்டோம்.
கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதுதான் பாலுக்கான அடிப்படை என்பதில்லை. தவிர, நம் முன்னோர்கள் தாவரங்களில் வடிகிற திரவங்களையும் பால் என்றுதான் சொல்லி வந்திருக்கிறார்கள். உதாரணத்துக்குத் தேங்காய்ப்பாலில் ஆரம்பித்து எருக்கம்பால் வரைக்கும் சொல்லலாம். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக விலங்கிடமிருந்து பெறப்படுகிற பசும்பால் தருவதால், அதன் மீதான பாசிட்டிவ் தாக்கம் இங்கு அதிகம். அதேபோல, உலகளவில் விலங்குகளிடமிருந்தே (பசு மற்றும் எருமை) அதிகளவில் பால் பெறப்படுவதால், அதைப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்காகத் தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிற பாலை `பால்' என்று சொல்லாமல் எப்படி?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

பாலில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் இருக்கும். தாவரங்களில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இருக்கும். இது தாவரங்களைப் பொறுத்து மாறுபடும். இதிலிருக்கிற சத்து அதிலிருக்காது, அதிலிருக்கிற சத்து இதிலிருக்காது என்கிற நிலைதான். விலங்குகளைப் பொறுத்தவரை, அவற்றுடைய கன்றுகளுக்குத் தருவதற்காக அவற்றின் உடம்பிலிருந்து பால் சுரக்கப்படுவதால், கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் அதில் இருக்கும். ஆனால், தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிற பால் அதனுடைய இளம் செடிகளுக்காக இயற்கையாக உருவானதில்லை. நாம்தான் அதைப் பிழிந்தெடுக்கிறோம் என்பதால் அதில் மரபுரீதியான சத்துக்கள் இருக்காது'' என்றவர் தொடர்ந்தார்.

       சித்த மருத்துவர் விக்ரம்குமார்

குழந்தைகள் பால் குடிப்பது ஓகே. ஆனால், பெரியவர்கள் குடிக்கும்போது கலோரி ஓவர்லோடு ஆகலாம் அல்லது உடம்பில் கால்சியம் சத்து அதிகரித்துவிடலாம். அதனால், பால் குடித்தே ஆக வேண்டுமென்றால், தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம். பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் பொருள்கள் சாப்பிடாதவர்கள் தாவரங்களிடமிருந்து பெறப்படுகிற பால்களை அருந்தலாம்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கருப்பட்டி காபி, மல்லி காபி என்று அருந்திக்கொண்டிருந்த நம் மக்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். பாலில் செய்கிற கலப்படம், பிரிட்டிஷ்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்க அறிமுகப்படுத்திய தேயிலை, அதில் தற்போது செய்யப்படுகிற கலப்படம் இவையெல்லாம்தான் நம்முடைய ஆரோக்கியத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றன.
தவிர, எல்லோராலும் விலையுயர்ந்த தாவரப்பால்களை பயன்படுத்த முடியாது. பாலிலேயே இத்தனை பிரச்னைகளிருக்க, இதில் விலங்குகள் பாலென்ன, தாவர பாலென்ன... யாருக்கு எது தேவையோ அதை அருந்தலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்