நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆயுர்வேத மருத்துவத்தை சுற்றி பரவியுள்ள சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

 

ஆயுர்வேதம் எண்ணற்ற மக்களை நாள்பட்ட சுகாதார நிலைமைகளிலிருந்து குணமடைய உதவுகிறது.


ஆயுர்வேதம் என்பது பழமையான இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆயுர்வேதம் எண்ணற்ற மக்களை நாள்பட்ட சுகாதார நிலைமைகளிலிருந்து குணமடைய உதவுகிறது. இருப்பினும் நவீன அறிவியல் தற்போது பிரபலமடைந்து வருவதால், ஆயுர்வேதம் குறித்து பரவியுள்ள சில பொதுவான கட்டுக்கதைகளை குறித்து நாம் இங்கே பார்ப்போம்.

1. ஆயுர்வேத மருந்துகள் வேலை செய்ய நேரம் எடுக்கும்:

ஆயுர்வேதத்தில் ஒரு முழுமையான அணுகுமுறை இருப்பதால், ஆயுர்வேத மருத்துவம் வேலை செய்ய நேரம் எடுக்கும் என்பது தவறான கருத்து. இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரண மருந்துகளை விட சல்லாக்கி மற்றும் மஞ்சள் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையை குணப்படுத்த எடுக்கும் நேரத்திற்கும் ஆங்கில மருந்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நோயின் தீவிரத்தையும், ஒரு நபரின் வலிமையை பொருத்தும் ஆயிர்வேத மருந்துகள் செயல்படும் காலம் நீளும். நவீன மருத்துவத்தைப் போலல்லாமல், பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவம் அறிகுறி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் மூல காரணத்திற்காக செயல்படுகிறது.

2. ஆயுர்வேதம் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிரானது

ஆயுர்வேதம் எந்தவொரு குறிப்பிட்ட உணவிற்கும் எதிரானது அல்ல. அல்லது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே ஆதரிக்கிறது என்பதும் அர்த்தமல்ல. காய்கறிகள் அல்லது இறைச்சி போன்ற இயற்கை உணவு ஆதாரங்களுக்கு வரும்போது ஆயுர்வேதம் சார்புடையதாக இருக்கிறது. ஆயுர்வேதம் பல்வேறு வகையான இறைச்சிகளின் பண்புகளையும் அவை நம் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவையும் விவரிக்கிறது. இரத்த சோகை போன்ற நிலைமைகளில் கூட, இறைச்சி நுகர்வு ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறையின் ஒரு பகுதியாகும்.

3. ஆயுர்வேதம் உண்மையான அறிவியல் அல்ல?

ஆயுர்வேதம் என்பது இந்தியாவில் தோன்றிய 5000 ஆண்டுகள் பழமையான அறிவியல் ஆகும். ஆனால் இப்போதைய நவீன அறிவியல் கொள்கைகளைப் பயன்படுத்தி ஆயுர்வேதக் கருத்துக்களை நிரூபிப்பது ஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிடுவது போன்றது. ஆயுர்வேதத்திற்குப் பிறகு பல அறிவியல் தோன்றியது.

அவற்றில் எதுவுமே ஆயுர்வேதம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான கொள்கைகள் அல்லது நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சர்க்காடியன் ரிதம் (தோஷா கடிகாரம்), ரசாயனா (புத்துணர்ச்சி சிகிச்சைகள்), சத்விருத்தா (நடத்தை விதி), தினாச்சார்யா (தினசரி வழக்கம்), ரிதுச்சார்யா (பருவகால விதிமுறை), உடல் மற்றும் உளவியல் நிலைமைகளுக்கான தடுப்பு சுகாதார பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்.

இடைவிடாத உண்ணாவிரதம் (லங்கானா), குடல்-ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் (அக்னியின் கருத்து) மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான அடாப்டோஜெனிக் மூலிகைகளை உட்கொள்வது போன்ற நவீன சுகாதார கருத்துக்கள் ஆயுர்வேதத்தைப் பற்றிய அசல் குறிப்புகளைக் கொண்டுள்ளன. அஸ்வகந்தா மற்றும் குடுச்சி போன்ற ஆயுர்வேத மூலிகைகளின் நோயெதிர்ப்பு மற்றும் அடாப்டோஜெனிக் பண்புகளை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆயுர்வேதம் அதன் விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் நோய் மற்றும் தடுப்பு பற்றிய அடிப்படைக் கருத்துகளில் செயல்படுகிறது. ஆயுர்வேதத்தை விஞ்ஞானமற்றதாக அழைப்பதற்கு முன், இந்த பழமையான கொள்கைகளை சரிபார்க்க ஒரு சிறப்பு அறிவியல் நெறிமுறையை உருவாக்க வேண்டும்.

4. ஆயுர்வேதம் இந்திய உணவு வகைகளுக்கு மட்டுமே வேலை செய்கிறது


ஆயுர்வேதக் கொள்கைகளைத் தழுவுவதற்கு, நீங்கள் இந்திய உணவை அவசியம் சாப்பிட தேவையில்லை. உலகில் உள்ள எந்த உணவு வகைகளுக்கும் நாம் ஆயுர்வேதக் கொள்கைகளைப் பயன்படுத்தலாம். ஆறு சுவைகளுடன் கூடிய சூடாக, சமைத்த சைவ உணவு அல்லது இறைச்சி உணவு என எதுவாக இருந்தாலும் சரி, ஆயுர்வேதத்தின்படி அவை பின்பற்றக்கூடிய அடிப்படைக் கொள்கைகள் ஆகும். ஆயுர்வேதத்தை நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால் அவை எந்தவிதமான உணவு பழக்கத்திற்கும் பொருந்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

5. ஆயுர்வேத மருத்துவத்திற்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை

இது ஒரு எளிய மூலிகையாக இருந்தாலும் அல்லது சிக்கலான சூத்திரமாக இருந்தாலும், எல்லா மருந்துகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. மேற்பார்வை அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் நீண்ட காலத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு எளிய மருந்துகள் பெருங்குடலில் வறட்சிக்கு வழிவகுக்கும். ஒரு மருத்துவர் அல்லது பயிற்சியாளரின் ஆலோசனை அல்லது அந்த குறிப்பிட்ட மருந்துக்கான அறிகுறிகளையும் முரண்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். சரியான வழிகாட்டுதல்களைப் புரிந்து கொள்ளாமல் பொது மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.


6. ஆயுர்வேத மருந்தை எந்தஒரு ஆலோசனையும் இல்லாமல் உட்கொள்வது பாதுகாப்பானதா?

இப்போதெல்லாம், ஆன்லைன் வலைத்தளங்கள் மற்றும் கடைகளில் நிறைய ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்பாக இருப்பதால், ​​அவற்றை எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் முயற்சி செய்ய உங்களை தூண்டலாம். ஆனால் இந்த மருந்துகளில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எந்தவொரு ஆயுர்வேத மருந்தையும் உட்கொள்வதற்கு முன் ஆயுர்வேத மருத்துவர் அல்லது பயிற்சியாளரை அணுக வேண்டும் என  அறிவுறுத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!