நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகுக்கு அதிக தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது - ஐ.நா.வில் இந்திய தூதர் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகளவில் இந்தியா கைகொடுத்து வருகிறது.
நியூயார்க், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகளவில் இந்தியா கைகொடுத்து வருகிறது. இங்கு உருவாக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலக நாடுகள் பலவற்றுக்கும் வழங்கப்படுகிறது. இதையொட்டி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய துணைத்தூதர் கே.நாகராஜ் நாயுடு பேசினார்.

அப்போது அவர், “கொரோனா வைரஸ் சவால் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு விலை, வினியோகம் ஆகியவற்றை நாங்கள் உறுதி செய்கிறோம். உள்ளபடியே கூறுவதானால், எங்கள் சொந்த மக்களுக்கு போட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட உலக அளவில் நாங்கள் வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகம்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “இன்னும் 30 தடுப்பூசிகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்