நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

’இன்னும் பல ஆண்டுகள் வாழ்வேன்’ - பின்னோக்கி தொங்கிய தலையுடன் வாழும் தன்னம்பிக்கை மனிதர்!

 இத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலும், சுயமுன்னேற்ற பேச்சாளராக மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார் கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா.

பிரேசில் நாட்டில் மான்டி சான்டோ நகரை சேர்ந்தவர் கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா. இவருக்கு, பிறக்கும் போதே கழுத்து பின்னோக்கி வளைந்து, தலை முற்றிலும் திரும்பிய நிலையில் இருந்தது. கால்கள் மோசமாக வளைந்த நிலையில் இருந்தன. அவரது கைகளும் நெளிந்து பலமற்று இருந்தன. ஆர்த்ரோகிரிபோசிஸ் மல்டிபிளக்ஸ் என்றும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தபோது, இந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால், மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி, பலருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  


உடலில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வணிகவியல் துறையில் பல்கலைக்கழக பட்டம் பெற்றார் கிளாடியோ. இதுதொடர்பாக கிளாடியோ கூறும் போது, ''சிறுவயதில் இருந்தே என்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வேன். மற்றவர்களை சார்ந்திருக்க எப்போதும் விரும்பியதில்லை. டிவி, கம்ப்யூட்டரை ஆன் செய்ய, செல்போனை எடுக்க பயிற்சிகள் மேற்கொண்டேன். நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன்தான். தங்கள் நாட்டுக்கு வந்து பேசுமாறு எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. அங்கு சென்று பேசி வருகிறேன். மிக விரைவில் உலகம் முழுவதும் பயணித்து சுயமுன்னேற்ற உரையாற்ற இருக்கிறேன்'‘ என்கிறார் நம்பிக்கையுடன். .


ALSO READ ;   ஆயுர்வேத மருத்துவத்தை சுற்றி பரவியுள்ள சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!