நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நாய்கள் மற்றும் குதிரைகளுக்கும் ஓய்வூதியம் கொடுக்கும் நாடு எது தெரியுமா

போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.


சேவை செய்யும் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும் போது சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகின்றன. ஓய்வுக்குப் பிறகு அரசாங்கம் அந்த நாய்கள் மற்றும் குதிரைகளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தத்தெடுக்க விரும்பும் நபர்களிடம் ஒப்படைக்கப்படைக்கின்றன.

இதனால், அதன் சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் படையினர் / காவல்துறை உறுப்பினர்கள் போன்றவர்களின் வேண்டுகோளின் பேரில், உள்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது, இதன் திட்டத்தின் கீழ் இந்த நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அதற்கு அதிகாரபூர்வ அந்தஸ்தையும், சமூக பாதுகாப்பையும் வழங்குவதற்கான ஓய்வூதியமும் தயாரிக்கப்பட்டு வருகிறது, இதனால் புதிய உரிமையாளர்கள் அவர்களின் பராமரிப்பிற்கான செலவுகளை சமாளிக்கலாம். அதன் பராமரிப்பு சிறப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதனை பராமரிப்பவர்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிப்பதற்காகவும் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் மோரிஸ் கம்மின்ஸ்கி முன்மொழியப்பட்ட சட்டத்தின் வரைவை பற்றி குறிப்பிடுகையில், இந்த சட்டம் ஒரு தார்மீக பொறுப்பை நிறைவேற்ற உதவும் என்று கூறியுள்ளார், இந்த திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இந்த மசோதா இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்ற பின் இது சட்டமாக்கப்படும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!