நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உண்மையான சூரரைபோற்று 'பொம்மி' இவங்க தான்.. வெறும் ரூ.300ல் இருந்து ரூ.1000 கோடிக்கு வளர்ந்த நிறுவனம்..!

இன்று இந்திய முதலீட்டுச் சந்தையில் அனைவரும் குறிப்பிட்டு வரும் ஒரு நிறுவனம் Mrs Bector's Food, தென் இந்தியாவில் அதிகம் கேள்விப்படாத நிறுவனம் பல வழிகளை இந்திய மக்களைத் தனது தயாரிப்பைச் சுவைக்க வைத்து வருகிறது.

Mrs Bector's Food நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்னி பெக்டார் வெறும் 300 ரூபாயில் துவங்கிய இந்த நிறுவனம் இன்று 10,000 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் விடா முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் இந்தியா 

முழுவதும் மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம் கிரெமிகா பிராண்டின் கீழ் பிஸ்கட் மற்றும் இங்கிலீஷ் ஓவன் பிராண்ட்-ன் கீழ் பிரெட் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இங்கிலீஷ் ஓவன் பிராண்ட் தான் மெக்டொனால்டு நிறுவனத்திற்குப் பிரட் சப்ளை செய்கிறது. இதனாலேயே இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் ஐபிஓ 

மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம் தற்போது 540.54 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட ஐபிஓ வெளியிட்டுள்ளது. 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகளை 286 ரூபாய் முதல் 288 ரூபாய் வரையிலான விலைக்கு ஐபிஓவில் விற்பனை செய்யப்பட்டது. யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இந்நிறுவன பங்குகளைச் சுமார் 198.02 மடங்கு அதிகம், முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

மெக்டொனால்டு நிறுவனம் இதற்கு முக்கியக் காரணம் பர்கர் கிங் ஐபிஓ மூலம் வர்த்தகம் விரிவாக்கம் செய்யும் இதே நேரத்தில் இந்நிறுவனத்திற்குப் போட்டியாக மெக்டொனால்டு நிறுவனமும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும், அப்போது மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனத்தின் இங்கிலீஷ் ஓவன் பிராண்டின் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.


ராஜ்னி பெக்டார்

 45 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனத்தின் தலைவரான ராஜ்னி பெக்டார் லூதியானாவில் இருக்கும் பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பேக்கரி படிப்பை முடித்து கேக் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரித்துத் தனது ஊரில் இருக்கும் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தார்.

1976ல் வர்த்தகம் துவக்கம் 

1976ல் ராஜ்னி பெக்டார்-ன் கணவர் பிஸ்னஸ்-ல் பிசியாக இருந்த நிலையில், ராஜ்னி கடினமாக உழைத்து கேக் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரித்து வந்த நிலையில், இவரின் தயாரிப்பின் சுவை மக்களுக்குப் பிடித்துப்போகவே பல்வேறு பார்ட்டி மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆர்டர் கொடுக்கத் துவங்கினர்.
முதல் முதலீடு 

இதைப் பார்த்த ராஜ்னி பெக்டார்-ன் கணவர் முதல் முறையாக 300 ரூபாய் முதலீட்டில் ஒரு ஓவன் வாங்கிக் கொடுத்தார். 2 வருடத்தில் ராஜ்னியின் வளர்ச்சி மற்றும் திறமை பெரிய அளவில் வளர்ந்த நிலையில் சுமார் 20,000 ரூபாய் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் துவங்கினார்.

வர்த்தகத்தில் தொடர் வளர்ச்சி

அன்று முதல் இன்று வரையில் வர்த்தகத்தில் தொடர் வளர்ச்சியை அடைந்து வருகிறது மிஸ்டர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம். இன்றும் ராஜ்னி பெக்டார் கிரெமிகா நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் ஆக உள்ளார். மேலும் தனது குழந்தைகளுக்குப் பிரெட்-க்கான மாவு எப்படி இருக்க வேண்டும், எப்படி மெருகேற்ற வேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகளைக் கொடுத்து வருவதாக ராஜ்னி பெக்டார் தெரிவித்தார்.


பெண் தொழில்முனைவோர்

மேலும் 1978லேயே தனது கணவர் பெண்கள் தொழில் துவங்க வேண்டும் என்பதை ஆதரித்துத் தனது முயற்சிக்கு உதவி செய்தார் என்றும், 3 வருடத்திற்கு முன் தனது கணவரை இழந்துள்ளதை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் ராஜ்னி பெக்டார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!