நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெயிலுக்கு_இதமாய்_பானகம் நாம்_மறந்து_போன…❗#நீர்_சத்து_பானம்…❓❓❓

வெயிலுக்கு_இதமாய்_பானகம்❗❗
#நாம்_மறந்து_போன…❗

#நீர்_சத்து_பானம்…❓❓❓
👉முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக் கலந்த ஒரு பானம். 

உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.

⏩ #இளநீர்_பானகம்⏪

தேவையானவை

லேசான வழுக்கை உள்ள இளநீர் - 2 கப், 

பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், 

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை.

👉செய்முறை❓

இளநீர் வழுக்கையை மிக்ஸியில் அடித்து, பனங்கற்கண்டு, இளநீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்தப் பானகத்தை அப்படியே அருந்தலாம். அருமையாக இருக்கும்.

பலன்கள்

இளநீரில், பொட்டாசியமும் சோடியமும் இருப்பதால், கோடைக்கேற்ற குளிர் பானம். வியர்வையால் தளர்ந்துபோன தசைகளுக்கு நல்லது. வயிற்றுப் போக்கு, அல்சரால் அவதிப்படுபவர்கள் அருந்தலாம். உடலில் எனர்ஜி இல்லாமல் போகும்போது, உடனடியாக எனர்ஜியை அள்ளித் தரும். சிறுநீர் நன்றாகப் போகும். உஷ்ணத்தைத் தணிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும்.

⏩#லெமன்_பானகம்⏪

தேவையானவை

எலுமிச்சம் பழம் - ஒன்று, 

புதினா - சிறிதளவு, 

சுக்குப்பொடி, 

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  

பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.

👉செய்முறை❓

வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்... லெமன் பானகம் ரெடி❗ இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்... சுவை கூடும்.

கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

#வாழைப்பழம்_பானகம்...⏪

தேவையானவை❔

எலுமிச்சைச் சாறு - 200 மி.லி., 

மஞ்சள் வாழைப் பழம் - 10, 

நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு, 

சுக்கு - ஒரு துண்டு, 

ஏலக்காய் - 10.

👉செய்முறை❓

வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்

✨தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். 

✨பித்தத்தைத் தணிக்கும். 

✨உடல் பருமனைக் குறைக்கும். 

✨மயக்கம், களைப்பைப் போக்கும்.

⏩#பாசிப்பயறு_பானகம்⏪

❓தேவையான பொருட்கள்❔

பாசிப்பருப்பு – 1/2 கப் 

கருப்பட்டி அல்லது வெல்லம் – 
தேவையான அளவு ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை 

சுக்குப்பொடி – 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்) 

👉செய்முறை❓

ஒரு வாணலியில் பாசிப்பயறை போட்டு வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். பிறகு அதை ஆற வைத்து மிஷினில் போட்டு நைஸாக அரைத்து தேவையான அளவு நீர் ஊற்றி, ஏலக்காய் பொடி, சுக்குபொடி மற்றும் சுவைக்கேற்றாற்போல் வெல்லம் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

⏩ #வெற்றிலை_பானகம்⏪

தேவையானவை❔

வெற்றிலை - 7, 

காய்ச்சிய பால் - 2 கப், 

சப்ஜா விதை - அரை டீஸ்பூன், 

ரோஸ் சிரப் - சிறிதளவு, 

குல்கந்து - 4 டீஸ்பூன், 

நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - 3 டீஸ்பூன் (பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)

👉செய்முறை❓

வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில், பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

⭐பலன்கள்

வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.

⏩#புளிஎலுமிச்சை_பானகம்⏪

❓தேவையான பொருட்கள்

புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை

பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்

சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

❓செய்முறை❓

1. வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். 

2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். 

3. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். 

4. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். 

கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்!!!!!

💢மருத்துவப் பயன்

🌟தற்காலிகப் பசியைத் தணித்து, 

🌟அரை மணி நேரத்தில், 
பசியை தூண்டிவிடும். 

🌟பித்தத்தைத் தணிக்கும். 

🌟உடல் பருமனைக் குறைக்கும். 

🌟மயக்கம், களைப்பைப் போக்கும்.

🌟உணவு குழாயில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, உணவு செரிமானத்தை அளிக்கிறது. 

🌟இது உடலில் வெப்பத்தின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

🌟வாதம்,பித்தம்,இரத்தநோய், மயக்கம், வாந்தி, தாகம், காய்ச்சல், முதலியவற்றைப்போக்கும்.

⏩#தர்பூசணி_லெமன்_பானகம்⏪

கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

👉தேவையான பொருட்கள்❓

தர்பூசணி துண்டுகள் - 3

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு

இஞ்சி - சிறிய துண்டு

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

👉செய்முறை❓

இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சூப்பரான தர்பூசணி - லெமன் பானகம் ரெடி

👉தேவைப்பட்டால்…👈

அரைத்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும். 

#இஞ்சி_பானகம்⏪

தேவையான பொருட்கள்❔

வெல்லம் – 150கிராம்

இஞ்சி – 10 கிராம்

ஏலக்காய் – நான்கு

எலுமிச்சைப்பழம் – ஒன்று

👉செய்முறை❓

நீரில் வெல்லைத்தை கரைக்கவும்.

பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

ஒரு சிட்டிகை பொடித்த இஞ்சியை சேர்க்கவும். சுவை பெற தேவையான அளவிற்கு எலுமிச்சை பிழியவும்.

குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

#ஜிஞ்சா_பானகம்⏪

தேவையான பொருள்கள்❔

புளி - 100 கிராம் 

தண்ணீர் - 400 மி.லி 

வெல்லம் - 200 கிராம் 

உப்பு - தேவையான அளவு 

சுக்குப்பொடி - சிறிதளவு 

மிளகுத்தூள் - சிறிதளவு 

👉செய்முறை❓

முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது. 

பலன்கள்

✨ரத்தசோகை நீங்கும் 

✨பசியை உண்டாக்கும் 

✨குமட்டல் நீங்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!