நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இம்யூனிட்டிக்கு பெஸ்ட்: வீட்டில் முருங்கைக்கீரை சூப் சிம்பிள் செய்முறை!

 முருங்கைக்கீரை சூப் செய்வதற்கான சிம்பிள் செய்முறையை இங்கே


மருத்துவ குணம் நிறைந்த மரங்ககளில் முருங்கையும் ஒன்று. இதன் காய்களை உணவுகளில் அன்றாட பயன்டுத்தலாம். இதன் இலைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். ஏனென்றால் இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும்.
முற்றாத முருங்கை இலை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதில் நாம் சேர்க்கும் நெய் முருங்கை இலையோடு சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை முயற்சி செய்யலாம். முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா, கவலையை விடுங்கள் இதோ உங்களுக்கான எளிய செய்முறை.

முருங்கைக் கீரை சூப் எப்படி செய்வது?



தேவையான பொருட்கள்


1 கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை

1 ஸ்பூன் மிளகு

1 ஸ்பூன் சீரகம்,

சின்ன வெங்காயம்- 5,

உப்பு- தேவையான அளவு.

2 கிளாஸ் தண்ணீர்.


நீங்கள் செய்ய வேண்டியது


முதலில் கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு முருங்கை இலையில் உள்ள காம்புகளை நன்றாக ஆய்ந்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றில் தண்ணீர் விட்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீ மூட்டவும். பாத்திரம் சூடாகிய பின்னர், அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும், அதோடு ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை அவற்றோடு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்போது அவை சேர்ந்து நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடதிற்கு

சுண்ட காய்ச்சவும். நீங்கள் சேர்த்த 2 டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரும் வரை அவ்வாறு செய்ய வேண்டும்.

இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கரண்டியில் முருங்கை இலை சூப்பை எடுத்து பரிமாறலாம். கொஞ்சம் சூடாகவே இதை அருந்துவது உடலுக்கு நல்லது. காரம் அதிகம் சேர்ப்பர்வர்களாக இருந்தால், சிறிதளவு மிளகுத் தூள், வெள்ளைப் பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.


Also read : உணவை மென்று சாப்பிடுவது எப்படி?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்