நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாதம் 2 கோடி ரூபாய் வாடகை.. பிரம்மாண்ட வீட்டில் குடியேறும் இந்தியப் பணக்காரர்..!

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் அமைப்பாக விளங்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆதார் பூனவல்லா உலகின் மிகவும் காஸ்ட்லியான குடியிருப்பு பகுதியாக விளங்கும் லண்டன் மேஃபேர் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டிற்குக் குடியேறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து விற்பனை வாயிலாக மட்டும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பாதிக்கும் எனக் கணிப்புகள் நிலவி வரும் நிலையில் இந்நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லா வாரம் 69,000 டாலர் அதாவது வாரம் 50 லட்சம் ரூபாய், மாதம் 2 கோடி ரூபாய் வாடகை கொண்ட பிரம்மாண்ட மேன்ஷனுக்கு குடியேறியுள்ளார்.
ஆதார் பூனவல்லா

சுமார் 25,000 சதுரடி கொண்ட இந்த பிரம்மாண்ட மாளிகை போன்ற வீட்டை ஆதார் பூனவல்லா போலாந்து நாட்டின் பில்லியனரான Dominika Kulczyk என்பவரிடம் இருந்து வாடகைக்காகப் பெற்றுள்ளார். இதுகிட்டத்தட்ட 24 பிரிட்டன் வீடுகளுக்கு இணையான அளவீட்டை கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆதார் பூனவல்லா பட்டம்

வெஸ்ட்மினிஸ்ட் பல்கலைகழக்கத்தில் பட்டம் பெற்ற ஆதார் பூனவல்லா இந்தியாவில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் நிலையில் லண்டனில் குடியேறியுள்ளார். மேலும் நீண்ட காலம் பிரிட்டனில் வசித்த காரணத்தால் லண்டனைத் தனது 2வது வீடு என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தும் உள்ளார்.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி

கொரோனா தொற்றுக்கு பின்பு பிரிட்டன் நாட்டில் 10 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக மதிப்புடைய வீடு மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்க விரும்புவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் கன்சல்டிங்க் நிறுவனமான க்னெட் பிராங் தெரிவித்துள்ளது.
மேஃபேர் பகுதி

ஆதார் பூனவல்லா தற்போது குடியேறியுள்ள மேஃபேர் பகுதியில் உலகின் பல முன்னணி தொழிலதிபர்களும், பில்லியனர்களும் உள்ளனர். குறிப்பாக போன்ஸ் 4u நிறுவனத்தின் தலைவர் ஜான் காட்வெல் போன்ற பல அரசியல் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகளும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!