நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

450 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்: அளவைக் கண்டு அசந்து போவீர்கள்

பிரிட்டிஷ் கலைஞர் ஸாசா ஜாஃப்ரி உலகின் மிகப்பெரிய ஓவியத்தை உருவாக்கி உலக சாதனைகளின் பதிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த ஓவியத்தின் அளவு 6 டென்னிஸ் கோர்ட்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு கலைஞரின் இதயமும் மனமும் ஒரு விஷயத்தை எண்ணிவிட்டால், அவர் அதை எப்படியும் செய்து முடித்து விடுகிறார். நாம் வழக்கமாக கற்பனை கூட செய்து பார்க்காத விஷயங்களை ஓவியர்கள் தங்கள் கேன்வாஸில் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் பிரிட்டனின் கலைஞர் ஸாசா ஜாஃப்ரி உலகளவில் பிரபலமாகி விட்டார். எப்படி என்பதை இங்கே காணலாம். 

ஸாசா உலகின் மிகப்பெரிய ஓவியத்தை தீட்டினார்

பிரிட்டிஷ் கலைஞர் ஸாசா ஜாஃப்ரி உலகின் மிகப்பெரிய ஓவியத்தை (Painting) உருவாக்கி உலக சாதனைகளின் பதிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த ஓவியத்தின் அளவு 6 டென்னிஸ் கோர்ட்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கேன்வாஸ் மிகப் பெரியது, அதில் 6 டென்னிஸ் போட்டிகளை விளையாட முடியும். ஸாசா இதை 17 ஆயிரம் 176 சதுர அடியில் உருவாக்கியுள்ளார். இதை உருவாக்க ஸாசா கடுமையாக உழைத்தார்.

அழகான ஓவியம் கோடிகளில் விற்கப்பட்டது

இந்த ஓவியத்தை பிரெஞ்சு தொழிலதிபர் ஆண்ட்ரே அப்தோன் ரூ .450 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த ஓவியம் 'மனிதநேயத்தின் பயணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பெறப்பட்ட பணம் தேவையில் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த அற்புதமான கலைப்படைப்பைக் காண மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள்.

6300 லிட்டர் வண்ணப்பூச்சுடன் செய்யப்பட்ட ஓவியம்

இந்த ஓவியத்தை உருவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இதை உருவாக்க ஸாசா 70 பிரேம்களைச் சேர்த்தார். அதன் பிறகு அதில் தன் கலைத்திறமையைக் காட்டினார். இது மட்டுமல்லாமல், 1065 பெயிண்ட் தூரிகைகள் மற்றும் 6300 லிட்டர் பெயிண்டு ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!