நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சயனைடை விட 1000 மடங்கு விஷம்... உலகின் மிக ஆபத்தான விலங்கு என்பதை உணராமல் போட்டோ எடுத்த பெண்

 வன உயிரியியல் பூங்காவில் பெண் ஒருவர் உலகின் மிகவும் ஆபத்தான விலங்கு ஒன்றை கையில் வைத்து போட்டோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வன உயிரியியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் வனவிலங்குகள் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இந்த அனுபவம் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும் கவனக்குறைவான நேரத்தில் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். அதுப்போன்ற சம்பவம் ஒன்று தான் தற்போது அரங்கேறி அதிர்ச்சியை அளித்துள்ளது.

தி மிரர் பத்திரிக்கையின் தகவல்படி, வன உரியியல் பூங்காவில் பெண் ஒருவர் பழுப்பு நிற ஆக்டோபஸ் ஒன்றை உள்ளங்கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து கையில் கிடைத்த ஆக்டோபஸ் குறித்து இணையத்தில் தேடி உள்ளார். அதில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பழுப்பு நிற ஆக்டோபஸ் சயனைடை விட 1000 மடங்கு விஷம் கொண்டது. ஒரு நிமிடத்தில் 26 பேரை கொல்லும் விஷத்தன்மை கொண்டதாகும்.

இந்த ஆக்டோபஸ் கடித்தால் அவர்களை காப்பாற்றுவதற்கு ஒரே வழி உடனடியாக அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுப்பது மட்டும் தான். இந்த ஆக்டோபஸின் விஷத்தன்மை உடலில் பரவினால் குமட்டல், மங்கலான பார்வை, வாந்தி, குருட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்தவித சிக்கலும் அந்த ஆக்டோபஸால் ஏற்படவில்லை.

கெய்லின்மாரி என்ற அந்த பெண் இந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல்களை பார்த்து பீதியடைந்த பெண் தனது தந்தைக்கு அழைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பெண்ணின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.



ALSO READ :  Bizarre! சடலங்களின் கண்காட்சியை பார்க்க வேண்டுமா? மாஸ்கோவுக்கு வாங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்