நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய வட கொரியா... மீண்டும் அதிரடியை தொடங்கிய கிம் ஜாங் உன்..அதிகரிக்கும் பதற்றம்!

ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய வட கொரியா. ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டோக்கியா

வட கொரியா, ஐப்பான் கடலில் தொலை தூரம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டதாக அமெரிக்காஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தனது கிழக்கு கடற்கரையில் இருந்து இந்த இரண்டு ஏவுகணைகளையும் வட கொரியா ஏவியது என ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் ஏவுகணைகள் ஜப்பானுக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக அவர் கூறினார். இந்த தகவலை தென் கொரியாவும், அமெரிக்காவும் உறுதி செய்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின் வட கொரியா நடத்தும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்த்ககது. 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் படி, ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்துவதாக கருதி ஏவுகணை சோதனை மேற்கொள்ள வட கொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மஞ்சள் கடலில் குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக் அல்லாத ஏவுகணையை சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்திய வட கொரியா, தற்போது தொலை தூரம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. ஜப்பான் தனது பிராந்திய கடலுக்குள் ஏவுகணை பாகங்கள் விழவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனைகள் வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டம் அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை காட்டுகிறது என்று அமெரிக்க இராணுவத்தின் இந்தோபசிபிக் தளபதி தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!