நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Cryptic Pregnancy: குழந்தை பிறக்கும் வரை தான் கர்ப்பம் என்றே அறியாத பெண்

அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணான கிளாரி வைஸ்மேன், வழக்கம் போல் பார்டி, ஆடல், பாடல், என காலத்தை கழித்து வந்தார். 

திடீரென்று ஒரு நாள் சமையல் அறையில் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அவள் தனது அம்மாவை அழைத்தாள். அவளது அம்மா உடனேயே அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கே அவளுக்கு, 5 நிமிடத்தில் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் இருந்தது. அதன் எடை 3.48 கிலோவாக இருந்தது. 

அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

குழந்தை பிறந்த முதல் 12 மணி நேரத்திற்கு, கிளாரி வைஸ்மேன் குழந்தையின் முகத்தை கூட பார்ப்பதை தவிர்த்தார். அந்த அளவிற்கு அவர் அதிர்ச்சியில் இருந்தார்.

குழந்தை பிறந்தபோது, ​​கிளாரிக்கு 25 வயது, அவரது காதலனுக்கு 21 வயது.அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த க்ளாரிக்கு, கர்ப்ப்பமாக இருந்த காலத்தில் உடல் எடை எதுவும் அதிகரிக்கவும் இல்லை.

இது சாத்தியமா என பல்வேறு ஆச்சர்யமான கேள்விகள் எழுந்துள்ளன. இதனை cryptic pregnancy அதாவது, ரகசிய கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் அல்லது வேறு ஏதேனும் உடல் பிரச்சினை காரணமாக, கர்ப்ப காலத்திலும், மாத விடாய் நிற்காமல் ஏற்படுகிறது. அதனால், தான் கர்ப்பமாக இருப்பது பெண்களுக்கு தெரியாமல் போகிறது. மேலும், அவர்களது உடல் எடையிலோ அல்லது வடிவத்திலோ மாற்றம் ஏதும் காணப்படாததால், அவர்களுக்கு கர்ப்பம் இருப்பதை அறிய முடியாமல் போகிறது. இது மிகவும் அரிதாக நிகழும் சம்பவம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்