நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் பருமன் கொண்டவர்களே ?உஷாராக இருங்க . ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!!!!

உலக அளவில் உடல் பருமன் பிரச்சனையால் உயிர் இழப்பவர்கள் அதிகமாக உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலவகை அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகமாகிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உலகில் பெரும்பாலான இறப்புகளுக்கு புகைப்பழக்கத்தை விட உடல் பருமன் பிரச்சினை தான் முக்கிய காரணமாக உள்ளதாக ஸ்காட்லாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மரணம் அடைந்தவர்களின் தரவுகளை ஆராய்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உடல் பருமனால் உயிரிழந்தவர்கள் தான் அதிகம். உடல் பருமன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் குழந்தை பெறும் பாக்கியம் குறைந்து கொண்டே வருகிறது. உடல் பருமன் காரணமாக இதய நோய் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உங்கள் உணவு பழக்கம் தான். அதனை நீங்கள் மாற்றிக் கொண்டால் உடல் பருமனில் இருந்து விடுபடலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு மரணம் மிக பக்கத்தில் உள்ளது என்று நினைத்து, சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்