நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரஷியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாரிப்பு

உலகிலேயே முதல் முறையாக ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.‌ இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷியாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ரஷிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை முடிவுகள் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்பதை உறுதி செய்ததோடு அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியது’’ என்றார்.

மேலும் அவர், “அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. எனவே இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம்’’ எனவும் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்