நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

5 வார்த்தைகள் கொண்ட ஒரு டிவீட் 2.9 மில்லியன் டாலருக்கு விற்பனை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான ஜாக் டோர்சியின் முதல் டிவீட்டான "just setting up my twitter" என்ற டீவிட்டை non fungible tokenஆக விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலகளவில் பலர் இந்த டீவிட்டை கைப்பற்றப் போட்டிப்போட்டனர்.

உலகளவில் தற்போது NFT மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் ஜாக் டோர்சியின் முதல் டிவீட்-ஐ வாங்கியது யார்..?!

NFT விற்பனை

சென்ட் இன்னும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘Valuables' platformல் சமீபத்தில் பிரபலங்களின் டிவீட்களை NFT எனப்படும் non fungible tokenஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதல் டிவீட்

இந்த நிலையில் ஜாக் டோர்சியின் முதல் டிவீட்டான "just setting up my twitter" என்ற டீவிட்டை சுமார் 2.9 மில்லியன் டாலருக்கு மலேசியத் தொழிலதிபரான சினா எஸ்டவி என்பவர் ஏதர் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வாங்கியுள்ளார்.

மலேசியாவின் சினா எஸ்டவி

இதுகுறித்து பிரிட்ஜ் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சினா எஸ்டவி தனது டிவிட்டரில், ஜாக் டோர்சியின் முதல் டிவீட் அல்ல இது ஒரு மோனலிசா ஓவியம் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

NFT என்றால் என்ன..?

 மேலும் NFT என்பது ஒரு கிரிப்டோகிராபிக் சொத்து, இதை யாராலும் மறு உருவாக்கம் செய்ய முடியாது. மேலும் இதை யாராலும் வர்த்தகமோ அல்லது எக்ஸ்சேஞ் செய்யவோ முடியாது. தற்போது உலகளவில் இந்த NFT டெக் தலைவர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஜாக் டோர்சி நன்கொடை

மேலும் இந்த டீவிட் மூலம் கிடைத்த 2.9 மில்லியன் டாலர் தொகையை ஜாக் டோர்சி பிட்காயினாக மாற்றிவிட்டு அப்படியே அந்தத் தொகையை Give Directly எனப்படும் ஆப்பிரிக்க ரெஸ்பான்ஸ் பன்ட் அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

2.9 மில்லியன் டாலர் பிட்காயின்

இந்த விற்பனையில் கிடைத்த 2.9 மில்லியன் டாலர் தொகையை 5 சதவீதத்தைக் கமிஷன் தொகையாக ‘Valuables' தளம் பெறும் மீதமுள்ள 95 சதவீத தொகை மூலம் ஜாக் டோர்சி சுமார் 50.8751669 பிட்காயின் பெற்றுள்ளார். இதை அப்படியே ஆப்பிரிக்க அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!