நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாண்ட்விச், தந்தூரிக்கு ஏற்ற டேஸ்டியான புதினா சட்னி ரெடி!

சாண்ட்விச், தந்தூரி, கபாப், ஃப்ரைஸ் என அணைத்து ஸ்நாக்ஸ் வகைகளுக்கு ஏற்ற டேஸ்டி புதினா சட்னி.
மாலை வேளை ஸ்நாக்ஸ் வகைகளை ஸ்பெஷலாக்கும் ருசியான புதினா சட்னி 15 நிமிடத்தில் ரெடி. ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு சிறிய ஜாடியில் அரைத்த சட்னியை மாற்றி, காய்கறி கட்லெட், பிரட் பக்கோடா, பிரஞ்சு ஃப்ரைஸ், சீஸ் பால்ஸ், கபாப், பன்னீர் டிக்கா போன்ற ஸ்நாக்ஸ் உணவுகளுடன் இணைத்து சாப்பிடலாம். காற்று புகாத ஸ்டீல் பாக்சில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.


தேவையான பொருள்கள் :

புதிய புதினா இலைகள் – 2 கப்

நறுக்கிய பச்சை மிளகாய் – 1 முதல் 2

நறுக்கப்பட்ட இஞ்சி – 1 இன்ச்

சாட் மசாலா – 1/2 டீஸ்பூன் அல்லது 
சுவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

புதினா இலைகளைத் தண்ணீரில் நன்றாக அலசி, அதனோடு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும்.

இந்தக் கலவையோடு சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். உங்களிடம் சாட் மசாலா இல்லையென்றால், ¼ டீஸ்பூன் உலர் மாம்பழ தூள் (அம்ச்சூர் தூள்), ¼ டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் மற்றும் ¼ டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

இதனோடு தண்ணீரைச் சேர்த்து மென்மையான சீரான நிலைக்கு அரைக்கவும். அரைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!