நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுளிடமிருந்து வந்த மெயிலால் யூடியூபர்கள் அதிர்ச்சி... வருமானத்தில் கை வைக்க போகும் புதிய விதி!

யூடியூப் மூலம் மாதம் கணிசமான வருவாய் ஈட்டி வரும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு மோசமான செய்தி ஒன்றை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.
டிவி சேனல்களை காட்டிலும் மிகவும் பிரபலமடைந்து அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன யூடியூப் சேனல்கள். உலகம் முழுவதும் இணையத்தில் உலா வந்து வைரலாகும் யூடியூப் வீடியோக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இந்நிலையில் அமெரிக்காவை தவிர இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள யூடியூப் மூலம் மாதம் கணிசமான வருவாய் ஈட்டி வரும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு மோசமான செய்தி ஒன்றை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யூடியூப் வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் வருமானம் பெறும் அனைத்து யூடியூபர்களுக்கும் கூகுள் மெயில் ஒன்று அனுப்பியுள்ளதாக தெரிகிறது. கூகுள் அனுப்பியுள்ள அந்த மெயில் அமெரிக்க நாட்டை தவிர பிற நாடுகளில் உள்ள யூடியூப் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு சிறந்த செய்தியாக இல்லை. ஏனெனில் கூகுள் அனுப்பியுள்ள மெயிலில் கன்டன்ட் கிரியேட்டர்களின் வருமானத்தை குறைக்கும் வகையில் ஒரு புதிய விதி பற்றி கூறப்பட்டுள்ளது.

யூடியூபர்களுக்கு கூகுள் அனுப்பியுள்ள மெயிலில், அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெறும் வருவாயின் அடிப்படையில், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அனைத்து யூடியூபர்களிடமிருந்தும் குறிப்பிட்ட சதவீத அளவு வரிகளை விரைவில் கழிக்க போவதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவை தவிர பிற நாடுகளில் உள்ள யூடியூபர்களுக்கான தங்களது இந்த புதிய கொள்கை வரும் ஜூன் 2021 முதல் வர வாய்ப்புள்ளதாக யூடியூப் படைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் யூடியூபர்கள் பெரும் வருவாயிலிருந்து கழிக்க வேண்டிய சரியான வரிகளை தீர்மானிக்க , கூகுள் ஆட்ஸென்ஸில்(Google AdSense) தங்கள் வரி தகவல்களை சமர்ப்பிக்கும்படி படைப்பாளர்களையும் யூடியூப் கேட்டு கொண்டுள்ளது.

இந்நிலையில் யூடியூப் அதன் சப்போர்ட் பக்கத்தில், அமெரிக்க உள்நாட்டு வருவாய் குறியீட்டின் 3-வது அத்தியாயத்தின் கீழ், ஒரு கிரியேட்டர் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பார்வையாளர்களிடமிருந்து ராயல்டி வருவாயை பெறும் போது, அந்த கிரியேட்டரின் வரித் தகவல்களைச் சேகரிப்பது, குறிப்பிட்ட அளவு வரி பிடிப்பது மற்றும் உள்நாட்டு வருவாய் சேவைகளுக்கு (ஐஆர்எஸ்) இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பது கூகுளின் பொறுப்பாகும்.
எனவே கிரியேட்டர்கள் தங்களது ஆட்ஸென்ஸ் கணக்கில் தங்கள் தகவல்களை கூடிய விரைவில் புதுப்பிக்க யூடியூப் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை யூடியூபர்கள் வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் ஆட்ஸென்ஸ் கணக்கில் எதிர்பார்க்கும் தகவல்களை சமர்ப்பிக்கா விட்டால், யூடியூபர்கள் தங்கள் சேனலில் பதிவிடும் வீடியோக்களுக்கு உலகளவில் அவர்களின் பெறும் மொத்த வருவாயில் 24% கழிவை சந்திக்க நேரிடும் என்றும் யூடியூப் குறிப்பிட்டுள்ளது.
தங்களது இந்த புதிய விதியை உலக நாடுகளில் உள்ள யூடியூபர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் தங்களது வரி தகவல்களை சமர்ப்பிக்க உதவும் வகையிலும் வீடியோ ஒன்றை உருவாக்கி தனது சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்துள்ளது யூடியூப். யூடியூபர்களின் வீடியோக்களுக்கு அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து அவர்கள் ஈட்டும் வருவாயில் அதிகபட்சம் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து கிரியேட்டர் பெறும் மொத்த வருவாயில் சுமார் 15 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்