நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரஷ்யாவின் ஒரே பெண் விண்வெளி வீரரை கவுரவிக்க பார்பி பொம்மைகளை வெளியிட்ட டாய் நிறுவனம்!

 36 வயதான அன்னா கிகினா தற்போது 2022ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்றுப்பாதை பயணத்தில் பங்கேற்கும் ஒரே ரஷ்ய பெண்மணி ஆவார்.


ரஷ்யாவின் ஒரே பெண் விண்வெளி வீரரை கவுரவிக்கும் வகையில் மேட்டல் டாய் நிறுவனம் அவரை போலவே ஒரு பார்பி டாலை வெளியிட்டுள்ளது. இதனை பெண்களை ஊக்குவிக்கும் ஒரு பிரச்சாரமாக செயல்படுத்தியுள்ளது.

36 வயதான அன்னா கிகினா தற்போது 2022ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்றுப்பாதை பயணத்தில் பங்கேற்கும் ஒரே ரஷ்ய பெண்மணி ஆவார். அவர் விண்வெளியில் பயணிக்கும் நான்காவது பெண்மணியாகவும், விண்வெளி வீரர் வாலண்டினா தெரெஷ்கோவாவை தொடர்ந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் பயணிக்கும் முதல் ரஷ்ய பெண்மணியாக இவர் திகழ்கிறார்.

இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "கிகினாவின் திறமைகள், வெற்றிகள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட மேட்டல் நிறுவனம் விண்வெளி வீரர் போன்ற பார்பி டாலை வெளியிட்டது. "எந்த கனவும் நனவாகும் - நீங்கள் உங்களை நம்பி முன்னேற வேண்டும்" என்பதைக் காட்டிவதில் பார்பி ஒரு குறியீடாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேட்டல் நிறுவனத்தின் “யூ கேன் பி எனிதிங்” ரோல் மாடல்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விண்வெளி வீராங்கனை போல தோற்றமளிக்கும் பார்பியுடன் கிகினா ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த பார்பி டால் கிகினாவின் பெயர் குறிச்சொல்லுடன் ஜெட் ப்ளூ ஜம்ப்சூட் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் லோகோ கொண்ட வைட் ஆர்லன் ஸ்பேஸ் சூட் ஆகியவற்றை அணிந்திருப்பதைக் காணலாம்.

இது குறித்து ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தாவது, "அன்னா கிகினா வாழ்க்கையை சித்தரிக்க இது ஒரு சிறந்த உதாரணம். இது ஒரு பொறியியலாளர் சிறுமியின் கதை, ஒரு முறை தைரியமான நடவடிக்கை எடுத்து, விண்வெளி ஆராய்ச்சியில் தனது திறமையை காட்ட துணிந்த வீரர் இவர்" என புகழாரம் சூட்டியது. "பிரபஞ்சத்தின் பரந்த தன்மையை வெல்வது ஒரு பெண்ணின் வணிகம் அல்ல என்று யார் சொன்னார்கள்?" என்ற கேள்வியையும் விண்வெளி நிறுவனம் எழுப்பியது.

124 ரஷ்ய அல்லது சோவியத் விண்வெளி வீரர்களில், 4 பேர் மட்டுமே பெண்கள். முன்னதாக, அன்னா கிகினா ரேடியோ சைபீரியாவில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் ஒரு பொறியாளராக அவசரகால சூழ்நிலைகளில் பயிற்சி பெற்றார். இது குறித்து பேசிய கிகினா, படிப்படியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறுமிகளின் கனவுகளை நனவாக்குவதில் எனது கதை உதாரணமாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். தான் ஒரு குழந்தையாக இருக்கும்போது விண்வெளி வீரராக இருக்க வேண்டும் என்று கனவு காணவில்லை.

ஆனால் அப்போது என்னிடம் ஒரு பார்பி விண்வெளி பொம்மை இருந்திருந்தால், அந்த எண்ணம் எனக்கு சிறு வயதிலேயே வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு தொழிலையும் தேர்வு செய்வதற்கான உரிமையை பெறுவது மிக முக்கியமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோ டைம்ஸ் கருத்துப்படி, சோவியத் ஏவிய முதல் விண்வெளி விமானத்தின் 60வது ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் இந்த பொம்மை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ :  சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்