நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களை விட பெண்களே விதிமுறைகளை பின் பற்றி சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் - ஆய்வில் தகவல்

ஆண்களை விட பெண்களே விதிமுறைகளை பின் பற்றி சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமீரகம்,

ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர்.

அமீரகத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்தில், ஆண்கள் 26%-மும், பெண்கள் 21%-மும் விபத்துக்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்து ஏற்படுத்தியதில், பெண்கள் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

வாகனங்களை ஒட்டி செல்லும் போது, சீட் பெல்ட்டை பெண்கள் 94 சதவீதமும், ஆண்கள் 91 சதவீதமும் கவனம் செலுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்