நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காபியில ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிச்சா உடம்புல என்னென்ன மாற்றங்கள் நடக்கும்... தெரிஞ்சிக்கங்க... தினம் குடிங்க

காபி உலக மக்களால் அதிகம் விரும்பி பருகப்படும் ஒரு பானம். இதில் பல நற்குணங்கள் உள்ளன. காபி பல வகைகளில் தற்போது தயாரிக்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒன்று தான் புல்லட் காபி. கீட்டோ டயட்டில் எடை குறைக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
நெய்யில் ஏராளமான நன்மைகள் இருப்பது நமக்குத் தெரியும். அதேபோல தான் காபியிலும். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் காபியை விரும்பி குடிக்கிறார்கள். காபி பல வழிகளில் தயார் செய்யப்படுகிறது. அதில் நெய் காபி எனப்படும் ஆரோக்கிய நன்மை தரும் ஒரு வகை காபி மிகவும் பிரபலமாகி வருகிறது.

​நெய் காபி என்றால் என்ன?

பண்டைய காலம் தொட்டே நெய் என்பது நமது இந்திய உணவு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வகை தெளிவான வெண்ணெய் ஆகும். ஒரு சிறுதளவு நெய்யை, காபியில் சேர்க்கும் போது, அது எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இந்த நெய்யை காபியில் சேர்க்கும் போது பல ஆரோக்கிய நன்மைகளைக் நமக்கு தருகிறது. நெய் காபி, வெண்ணெய் காபியை விட மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுவையானதாகும்.

அமிலத்தன்மையைக் குறைக்க

வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது சிலருக்கு வயிற்றில் அமில தன்மை ஏற்படுகிறது. எனவே காபியில் சிறிதளவு நெய் சேர்ப்பது அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் நெய்யில் பியூட்ரிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை நமது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது . மேலும் இந்த கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

எடை இழப்புக்கு

காலையில் நெய் காபியுடன் கீட்டோ டயட் முறையை பின்பற்றினால் அது எடையை குறைக்க உதவும். கீட்டோ டயட் முறையை பின்பற்றாமல் நீங்கள் நெய் காபி குடிக்கிறீர்கள் என்றால், அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இந்த காபி நமக்கு பசியை தூண்டாமல் இருக்க உதவுகிறது. இந்த நெய்யில் பூஜ்ஜிய கார்போஹைட்ரேட்டுகள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை எடை இழப்பிற்கு உதவுகிறது.

மனநிலையை மேம்படுத்த

பொதுவாக நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், அது நரம்பு திசு வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது நமது மனநிலையை நிலையாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

லாக்டோஸ் ஒவ்வாமை

லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நெய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். ஏனென்றால் நெய் மற்றும் பால் பொருட்களில் திடப்பொருட்களும், புரதங்களும் இல்லை. வெண்ணெயுடன் ஒப்பிடும்போது நெய் வயிற்றில் ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

ஆற்றலை அதிகரிக்க

காபி நமது உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. காபியை குடிக்கும் போது அது கவன சிதறலை ஏற்படுத்துவதில்லை. காபியுடன் நெய்யைச் சேர்ப்பது அதன் ஆற்றலை மேலும் அதிகரித்து, அதன் பண்புகளை இரட்டிப்பாக்குகிறது. காபியில் உள்ள காஃபின் நமது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும்.

நெய் காபி செய்முறை

வழக்கமான முறையில் காபி தயாரித்து, அதை ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொண்டால் சுவையான நெய் காபி தயார். நெய்யின் அளவு நீங்கள் குடிக்க விரும்பும் காபியின் அளவைப் பொறுத்த்து.

கீட்டோ டயட்டை கடைபிடிப்பவர்களுக்கு நெய் காபி பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளோடு, நெய் காபியை உணவில் சேர்த்துக்கொண்டு அதிக சத்துக்களை பெறவும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்