நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதெல்லாம் வேற லெவல் திறமை... மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட்...

இதெல்லாம் வேற லெவல் திறமை என்றும் கூறுமளவிற்கும் மிகவும் தத்ரூபமாக மரக் கட்டைகளை மட்டுமே வைத்து இளைஞர் ஒருவர் பழைய புல்லட் பைக்கை உருவாக்கியிருக்கின்றார். 
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் நற்புகழைப் பெற்ற நிறுவனமாக ராயல் என்பீல்டு இருக்கின்றது. உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு. இத்தகைய நிறுவனத்தின் ஓர் தயாரிப்பையே கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் மரக் கட்டைகளால் உருவாக்கியிருக்கின்றார்.
புல்லட் பைக்கின் உருவத்தையே இளைஞர் மரத்தால் வடிவமைத்திருக்கின்றார். இது ஓர் மிக பழமையான புல்லட் மாடலாகும். 80ஸ் முதல் 2கே (2000) வரையிலான அனைத்து விதமான கிட்ஸ்களுக்கும் பிடித்த பைக் மாடலாக ராயல் என்பீல்டு பழைய புல்லட் இருக்கின்றது. அவ்வாறு, இப்பைக்கை அதிகம் பிடித்த நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவேதான் மரக்கட்டகைகளைக் கொண்டு பழைய ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார். கைப்பிடி தொடங்கி வீல் வரையிலான அனைத்து பாகங்களும் மரத்தாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏன் பார்ப்பதற்கு உலோகம் போன்று காட்சியளிக்கக்கூடிய பிரேக், கிக் ஸ்டார்ட், கியர், ஸ்டாண்ட், எஞ்ஜின், பிரேக் கேபிள், கால் வைப்பான்கள் மற்றும் ஹெட்லைட் என அனைத்தையுமே அவர் மரத்தினாலேயே உருவாக்கியிருக்கின்றார்.
ஒவ்வொரு பாகங்களும் மரத்தினால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை மிக தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. இது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எலெக்ட்ரீசியனாக பணி புரிந்து வரும் ஜிதின் கருளை எனும் இளைஞரே இத்தகைய ஆச்சரியமிகு செயலைச் செய்தவர் ஆவார்.
இதற்காக, மலேசியன் மரங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுதவிர, செம்மரம் மற்றும் தேக்கு ஆகிய மரங்களையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இவற்றைக் கொண்டே ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை அவர் வடிவமைத்திருக்கின்றார்.
இதற்காக அவர் சுமார் 2 ஆண்டுகள் வரை ஜிதின் செலவிட்டதாகக் கூறிப்படுகின்றது. எலெக்ட்ரீசியன் பணிபோக மீதமிருக்கும் நேரங்களைப் பயன்படுத்தி உருவாக்கியதனால் இத்தகைய அதிகபட்ச நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
கிக் ஸ்டார்ட் மற்றும் கியர் லிவர் இரண்டும் ஒரே பக்கத்தில் இருப்பதை வைத்தே இளைஞர் உருவாக்கியிருப்பது மிகவும் பழைய புல்லட் என்பதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். தொடர்ந்து, அதன் உருவம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவற்றைப் பார்த்தாலும் இது மிக மிக பழைய மாடல் புல்லட் என்பதை நம்மால் உணர முடியும்.
இளைஞரின் இந்த வியத்தகு செயல் நெட்டிசன்கள் மட்டுமின்றி ராயல் என்பீல்டு பைக் பிரியர்களையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. குறிப்பாக, இப்படியொரு ஒரு திறமை என பலரை ஜிதினின் செயல் வாயை பிளக்க வைத்திருக்கின்றது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!