நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோவையில் கொரோனா தீவிரமாகியுள்ளதாக பரவும் ஆடியோவால் மக்கள் பீதி

கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக கோவை அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் குரல் பதிவு (ஆடியோ) வேகமாக பரவி வருகிறது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவையில் திடீரென கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக கோவை அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் குரல் பதிவு (ஆடியோ) வேகமாக பரவி வருகிறது.

அதில் கோவையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 1,200 பேர் வரையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கோவையில் தற்போது 3-வது கொரோனா அலை தீவிரமாகியுள்ளது.

இதில் இருந்து மீள்வது மிகவும் கடினம். எனவே அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பின்பு பொது முடக்கம் அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளது என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறும்போது:-

குரல் பதிவில் பேசியிருப்பது அரசு ஆஸ்பத்திரி டாக்டரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில் தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!