நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்கள் சமையலறையில் இருக்கவேண்டியவர்கள்... சர்ச்சையில் சிக்கிய Burger King!

பெண்கள் சமையலறையில் இருக்கவேண்டியவர்கள்' என்று Twitterல் பதிவிட்டு சர்ச்சை
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் வாணுர்தி ஓட்டுவதாகட்டும், பல்வேறு பன்நோக்கு நிறுவனங்களில் உயர் பதவியை வகிப்பதாகட்டும், அரசியல், கல்வி, தொழில், சமுதாயப் பணி என அனைத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு நிகராக இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமை, வேலைக்கேற்ற ஊதியம்,8 மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை எனப்பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராடினார்கள்.

இப்போது அனைத்தும் கிடைத்து பெண்கள் கவுரமாக நடத்தப்படுகிறார்களா? பின் வரும் பதிவை படித்து விட்டு முடிவெடுங்கள்...

கடந்த திங்களன்று, சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்பட்ட வேளையில், பெண்களின் சாதனைகள் குறித்தும், பெண்களின் பெருமைகள் குறித்தும் உலகெங்கும் பலர் கருத்துரைத்தனர். ஆனால் Burger King நிறுவனத்தின் பிரிட்டிஷ் பிரிவு, சற்று வித்தியாசமாக... 'பெண்கள் சமையலறையில் இருக்கவேண்டியவர்கள்' என்று Twitter-இல் பதிவிட்டு... சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டது.
பர்கர் கிங்கின் இந்த மோசமான செயலுக்கு பல ட்விட்டர் யூசர்கள் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளனர். பர்கர் கிங் இன் விளம்பர தேவைகளுக்காக பெண்களை பயன்படுத்திக்கொண்டு இதுபோன்ற அவர்களை அவமானப்படுத்துவது உண்மையில் ஏற்புடையதல்ல என்று ஒரு யூசர் கூறியுள்ளார்.

இதற்கு மற்றொரு யூசர் நீங்கள் டெலிட் செய்த உங்கள் மெசேஜ் மூலம் உங்கள் நிறுவனம் எது போன்று ஒரு தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது நீங்கள் என்ன கூறினாலும் நீங்கள் செய்த செயல் ஏற்புடையதல்ல என்று மற்றொரு யூசர் கூறினார்

இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த செய்திகளை கண்டபின் உடனடியாக 'பர்கர் கிங்' தனது பதிவை நீக்கிவிட்டு பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கூறி மற்றுமொரு ட்வீட்டை வெளியிட்டுள்ளது.

Burger Kingன் இந்த மோசமான செய்தியால், பலரும் இனி Burger Kingல் உணவு சாப்பிடப்போவதில்லை என்றும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு இது போன்ற மோசமான செயலில் நிறுவனம் ஈடுபட்டிருக்கக்கூடாது என்றும் சோசியல் மீடியாக்களின் கமெண்ட் பிரிவுகளில் பலரும் கூறி வருகின்றனர்.

சமையலறைப் பொறுப்புகளில் பெண்கள் அவ்வளவாக ஈடுபடுவதில்லை என்பதால், அவர்களை உணவகத்துறைக்கு ஈர்க்கும் நோக்கத்தில் அவ்வாறு பதிவிட்டதாக Burger King பின்னர் கூறியது.

இருப்பினும் மக்களின் கொந்தளிப்பு குறைந்தபாடில்லை.

இதற்கு இணையவாசிகள், எவ்விதத்திலும் இதுபோன்ற ஒரு செய்தி பாராட்ட கூடியதல்ல நிச்சயம் இது அருவருக்கத்தக்க செயல் என்று நிறுவனம் மன்னிப்பு கேட்ட பிறகும் பலரும் நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்ற காலம் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் ஒரு சில மேலை நாடுகள் பழைய எண்ணத்தில் இருப்பது இதுபோன்ற செய்திகளால் தெரியவருகிறது. இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நம் சமூகம் பெண்களை எப்போதும் போற்ற வேண்டுமே தவிர இதுபோன்ற மோசமான செய்திகளால் அவர்களை மீண்டும் சமயலறைக்குள் தள்ளி விடக் கூடாது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்