நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Namaste சொல்லவும், சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தவும் எந்த நாட்டில் தடை?

 Namaste சொல்லவும், சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ள நாடு எது தெரியுமா? அந்த நாடு 28 ஆண்டுகளாக யோகாவை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவின் அலபா மாகாணத்தின் அரசு பள்ளிகளில் 28 ஆண்டுகளாக தொடர்ந்த யோகாவுக்கான தடை நீங்கியது. இந்தத் தடையை நீக்க முயற்சி எடுத்தவர் ஜெர்மி கிரே (Jeremy Gray) என்ற நாடாளுமன்ற உறுப்பினர். அதற்காக அவர் அலபாமா மாகாணத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

யோகா மீதான தடையை நீக்கக் கோரி அலபாமா மாகாணத்தில் அவர் கோரிக்கையை முன்வைத்தபோது, மக்கள் அவருக்கு ஆதரவாக சேரத் தொடங்கினர், இப்போது, மாகாண ஆளுநர் Kay Ivey தடையை ரத்து செய்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி, யோகாவை இனிமேல் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கலாம்; பயிற்சி செய்யலாம். ஆனால், மந்திரங்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.  

"யோகாவின் பயிற்சிகள், போஸ் மற்றும் உடலை வளைத்து பயிற்சி செய்யும் நுட்பங்களை மட்டுமே மாகாணத்தில் செய்யவேண்டும்" என்று சட்டம் கூறுகிறது. "மந்திர உச்சாடனங்கள், முத்திரைகள், ஹிப்னாடிக் நிலைகளின் தூண்டுதல், ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அதிலும் நமஸ்தே என வாழ்த்து சொல்வது வெளிப்படையாக தடைசெய்யப்படும்" என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், யோகா பயிற்சி செய்யும் போது, அதன் அசல் சமஸ்கிருத பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது, போஸ்களை ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும் "downward dog" மற்றும் "the warrior"போன்ற பெயர்களில் அழைக்கலாம், சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்களை பயன்படுத்தக்கூடாது.

முன்னதாக யோகா மீதான தடையை நீக்குவது தொடர்பாக மாகாண பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதற்குக் மார்ச் மாதத்தில் அனுமதியும் கிடைத்தது. தற்போது செனட்டில் விவாதம் நடைபெற்று வாக்களிப்பு நடைபெற்றது.  

யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யும் குழந்தைகளை 'வேறு மதத்திற்கு மாற்றப்படலாம்' என்ற சந்தேகத்தில் இந்தத் தடை கடந்த 28 ஆண்டுகளாக நீடித்தது. பழமைவாதிகள் விதித்த தடை இது என்று ஜெர்மி கிரே (Jeremy Gray) கூறுகிறார். 

"யோகா என்பது இந்து மதத்தின் முக்கியமான பகுதியாகும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இனிமேல், யோகா பயிற்றுவிப்பாளர்கள் மழலையர் பள்ளி முதல் அனைத்து நிலையிலும், பள்ளி மாணவர்களுக்கு யோகாவை கற்றுக் கொடுத்து அவர்களின் மனதை மாற்றலாம்" என்று  பழமைவாத அலபாமா ஈகிள் அமைப்பின் இயக்குநர் பெக்கி கெரிட்சன் கருதுகிறார்.


ALSO READ : விசித்திரமான கனவுகள் நமது மூளையை ஆரோக்கியமாக்கும் - சமீபத்திய ஆய்வில் தகவல்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!