'சைதாபேட்டை வடகறி'... இன்றும் குறையாத மவுசு! -
- Get link
- X
- Other Apps
சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்ட செய்யும் 'வடகறி' தான் நினைவுகளைத் தானாக தட்டி எழுப்பிவிடும்.
சைதாப்பேட்டை வட்டாரத்தில் மட்டுமே சுவைத்து கொண்டிருந்த இந்த வடகறியை, அதன் அதிகாரபூர்வமற்ற பிராண்டு அம்பாசிட்டராக இருந்து தமிழகம் முழுவதும் அறியச் செய்ததன் பெருமை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனையே சாரும். ஒரு திரைப்படத்தில் அவர் உதிர்த்த 'சப்பாலங்கிரி கிரி கிரி' என்ற வசனம் சைதாப்பேட்டை வடகறியின் பிராண்டு ஸ்லோகன் ஆனது.
வடகறி என்றால் சைதாப்பேட்டை எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதேபோல சைதாப்பேட்டை மக்களுக்கு வடகறி என்றால் நினைவுக்கு வருவது சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'மாரி ஓட்டல்'. சைதாப்பேட்டைக்கு வடகறியை அறிமுகப்படுத்திய பெருமை, இந்த மாரீ ஓட்டலையே சாரும்.
பருப்பு வடையின் அடுத்த அப்டேட் வெர்ஷன்தான் இந்த வடகறி. கடையில் பருப்பு வடைக்காக தயாரிக்கப்பட்ட கடலைமாவு மீதமான நிலையில், அதனை வெங்காயம், தக்காளி, மசாலா கலவையோடு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுதான் வடகறி.
"தனிச்சுவை மட்டுமின்றி, தரத்தில் துளி புகாரும் வராத அளவுக்கு தயார் செய்வதில் எப்போதும் கவனம் செலுத்துவதுதான் எங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குக் காரணம்" என்கின்றனர் இந்த உணவகத்தினர்.
வடகறிக்காக தனி அடுப்பு எறிந்து கொண்டிருந்தாலும், காலை 7.30 மணியில் தொடங்கி 9.30 மணிக்குள் மட்டுமே வடகறியை வாங்க முடியும்.
also read : சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment