தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
“ஆணுக்கு பெண் சரிசமம்” - நேபாளத்தில் கணவரை முதுகில் சுமந்து ஓட்டப்பந்தயம் ஓடிய பெண்கள்!
- Get link
- X
- Other Apps
“ஆணுக்கு பெண் சரிசமம்” என்ற பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாளத்தில் தங்களது கணவன்மார்களை முதுகில் ‘உப்பு மூட்டை’ தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயம் ஓடி அசத்தியுள்ளனர் பெண்கள். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.
உள்ளூர் சார்பில் நேபாளத்தில் தேவ்காட் கிராமத்தில் 100 மீட்டர் ஓட்டமாக நடைபெற்றது. வெவ்வேறு வயது பிரிவில் சுமார் 16 தம்பதியர் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
“மனதளவிலும், உடல் அளவிலும் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தவே இதை நடத்தியுள்ளோம்” என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திர போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
also read : செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
மாணவர்களும்...சமுதாய தொண்டும்...
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு
நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன. காத்மண்டு, உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை தாக்கி வரும் சூழலில், சமீப காலங்களாக பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இவற்றில் இந்தியாவில் 9 மாநிலங்களில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதுபற்றி அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடை வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தலைநகர் காத்மண்டுவில் தர்கேஷ்வர் நகராட்சி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன. 542 முட்டைகள் மற்றும் 75 கிலோ கோழி தீவனம் ஆகியவையும் அழிக்கப்பட்டன. பறவை பண்ணையில் நடந்த பி.சி.ஆர். பரிசோதனை அடிப்படையில் தொற்று உறுதியானது என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, பண்ணை பறவைகளிடையே சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் முரணாக தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பண்ணை முதலாளிகள்
குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்
கோடைக்கால விடுமுறையில் உங்கள் சுட்டிக் குழந்தையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளச் சுவாரசியமான பல்வேறு வழிகள் உள்ளன. 1.படம் வரைதல் (Drawing) உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும். 2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening) இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்
Comments
Post a Comment