நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி- சீனா திட்டவட்டம்

சீன மொபைல் செயலிகள் தடைச்செய்யப்பட்டதால் ஆன்லைனில் வாசிக்கும் வாய்ப்பும் இந்திய மாணவர்களுக்கு இல்லாமல் போனது. வீ சாட் தடை செய்யப்பட்ட பிறகு அலிபாபா நிறுவனத்துக்குச் சொந்தமான டிங் டாக் செயலியைப் பயன்படுத்தினர், ஆனால் அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது.
சீனாவுக்குப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் சீன தயாரிப்பு கொரோனா வாக்சின் அல்லது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவுக்குள் வர அனுமதிக்கப்படும் என்று புதுடெல்லி உள்ளிட்ட சீன தூதரகங்கள் அறிவித்துள்ளன.

சீனத் தயாரிப்பு கோவிட் 19 தடுப்பூசிகள் இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் படிக்கும் 23,000 இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் சீனாவில் மருத்துவக் கல்லூரிகளில் பயில்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியப் பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. கோவிட் 19 கவலைகளினால் இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளின் பயணிகளுக்கும் சீனா தடை விதித்தது.
இந்நிலையில்தான் மார்ச் 15ம் தேதி சீனா இவ்வாறு அறிவித்துள்ளது, சீனா தயாரித்த வாக்சினைப் போட்டுக்கொண்டால் இங்கு வரலாம் இல்லையெனில் அனுமதியில்லை என்று கூறியிருப்பது மாணவர்கள் உட்பட பலருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, இங்கு ஆத்ம நிர்பர் அரசு இருப்பதால் சீன தடுப்பூசிகள் கிடைக்காது.

“பிற நாட்டு வாக்சின்களை பரஸ்பரம் அனுமதிக்கும் நடைமுறை வரும், ஆனால் அதற்குக் கொஞ்சம் காலமெடுக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இப்போதைக்கு சீனா தயாரித்த வாக்சின் போட்டுக்கொண்டவர்களுக்கே சீனாவில் பயண அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்பு மாணவர்களுக்குப் பொருந்துமா என்பதை சீனா விளக்கவில்லை.

ஏற்கெனவே இந்திய மாணவர்கள் பலரின் மருத்துவம் உள்ளிட்ட படிப்பு வீணாகிறதே என்று சீனாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “உங்கள் உணர்வுகளையும் இந்திய மாணவர்களின் துயரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலைமைதான் உலகம் முழுதும் உள்ளது.
சீன மாணவர்களுக்கும் இதே கதிதான், உலகம் முழுதும் பல நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களும் கோவிட் 19 கட்டுப்பாடுகளினால் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். நிறைய பேர் ஆன்லைனில் கற்கிறார்கள், இத்தகைய சூழ்நிலையை நாங்களும் விரும்பவில்லை” என்றார்.

சீன மொபைல் செயலிகள் தடைச்செய்யப்பட்டதால் ஆன்லைனில் வாசிக்கும் வாய்ப்பும் இந்திய மாணவர்களுக்கு இல்லாமல் போனது. வீ சாட் தடை செய்யப்பட்ட பிறகு அலிபாபா நிறுவனத்துக்குச் சொந்தமான டிங் டாக் செயலியைப் பயன்படுத்தினர், ஆனால் அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!