நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவிற்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜான் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பியோங்யாங்.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் ஜப்பான், தென்கொரியாவின் தலைநகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளின் இந்த சுற்றுப்பயணம், சீனா மற்றும் வடகொரியாவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி கடந்த வாரம் தொடங்கியது. அணுஆயுத சக்திகளாக விளங்கும் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் வடகொரிய தலைமையிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழில் ஒன்றில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி, கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையை பரப்ப போராடும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், உங்கள் தூக்கத்தை கெடுக்கும் வேலைகளை தொடக்கத்திலிருந்தே செய்யாமல் இருப்பது நல்லது” என்று கூறியுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கா குறித்து இவ்வாறான ஒரு அறிக்கை வடகொரியாவில் இருந்து வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கிம் யோ ஜாங், இதனை பதிவு செய்திருந்தாலும், இதில் ஜோ பைடனின் பெயரை அவர் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!