நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்கள் மட்டும் பயணம் செய்யக்கூடிய பிங்க் பஸ்கள் அறிமுகம்... டிக்கெட் கட்டணம் ரொம்ப ரொம்ப கம்மி...

பெண்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பிங்க் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில், 2 புதிய பேருந்துகளின் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதுதான் இந்த பேருந்துகளின் சிறப்பம்சமாகும். ராஞ்சி மேயர் அஸ்கா லக்ரா இந்த 2 புதிய பேருந்துகளின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
துணை மேயர் சஞ்சீவ் விஜய்வர்கியா, ஆணையாளர் முகேஷ் குமார் ஆகியோருந்த புதிய பேருந்து சேவைகளின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ராஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சேவையை ராஞ்சி மாநகராட்சி தொடங்கியதாக மேயர் அஸ்கா லக்ரா இந்த நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் வெற்றியடையவில்லை. ஆனால் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங்க் பேருந்துகளின் சேவை நிச்சயம் வெற்றியடையும் என மேயர் அஸ்கா லக்ரா உறுதியளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பெண்கள் மட்டுமே பயணிக்க கூடிய 2 பேருந்துகளின் சேவையை தற்போது தொடங்கியுள்ளோம்.
கடந்த முறை போல் அல்லாமல் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளோம். இம்முறை ஓட்டுனர் தவிர, பேருந்தின் மற்ற பணியாளர்கள் அனைவரும் பெண்களாகதான் இருப்பார்கள். பேருந்தின் பணியாளர்கள் பிங்க் நிற உடையை அணிந்திருப்பார்கள்'' என்றார். பெண்கள் மத்தியில் இம்முறை இந்த பேருந்து சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 பேருந்துகளும் ஆரம்பத்தில் கச்சேரி சௌக் பகுதியில் இருந்து பிர்ஷா சௌக் பகுதி வரை இயக்கப்படும். இந்த 2 பகுதிகளுக்கு இடைப்பட்ட தொலைவு 10 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையிலும், இந்த பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் வெறும் 5 ரூபாய் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த பேருந்து சேவைகளுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படக்கூடாது என ராஞ்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் அஸ்கா லக்ரா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பெண்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற விதிமுறை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டபோது, கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு ஆண்களையும் பேருந்தில் ஏற பேருந்து ஊழியர்கள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை அத்தகைய தவறுகள் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வரும் நாட்களில் பிங்க் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த பிங்க் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாக பெண்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், ஸ்கூட்டர் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் இந்த பேருந்துகளுக்கு மாறுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்