நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நம்ம தயாரிப்பிலும் கை வெச்சுட்டாங்க... இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்கை காப்பியடித்து சீனர்கள் செய்த காரியம்

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை சீனர்கள் காப்பியடித்துள்ளனர். 
சர்வதேச சந்தைகளில் மிகவும் பிரபலமாக உள்ள கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை அப்படியே காப்பியடித்து சீனர்கள் புதிய வாகனங்களை உருவாக்கி விற்பனை செய்வது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பொதுவாக பிஎம்டபிள்யூ, கவாஸாகி மற்றும் டுகாட்டி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் வாகனங்களைதான் சீன நிறுவனங்கள் காப்பியடிக்கும்.
இந்திய நிறுவனங்களின் வாகனங்களை சீனர்கள் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று மிகவும் பிரபலமான இந்திய வாகனத்தை காப்பியடித்திருப்பது போல் தெரிகிறது. ஆம், ஹன்வேயின் ஜி30 அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள், நமது ராயல் என்பீல்டு ஹிமாலயனை போலவே உள்ளது.
சீனாவை சேர்ந்த இந்த பைக் உற்பத்தி நிறுவனம் ஸ்டாண்டர்டு மற்றும் ஜி30-எக்ஸ் என ஜி30 பைக்கை மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயனை போல் அல்லாமல், ஹன்வே ஜி30 மோட்டார்சைக்கிளில் 249.2 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 26 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஹன்வே ஜி30 பைக் ஒரு லிட்டருக்கு 32.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது.
ஹன்வே ஜி30 மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 185 மிமீ.
அதே நேரத்தில் ஹன்வே ஜி30 மோட்டார்சைக்கிளில், முழு டிஎஃப்டி ஸ்க்ரீன் உடன் ட்வின் போடு எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லைட்கள், 19 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் இன்னும் பல்வேறு வசதிகளையும் இந்த பைக் பெற்றுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளையும் விட்டு வைக்காமல் ஒரு சில மாற்றங்களுடன் சீன நிறுவனம் காப்பியடித்துள்ளது.
ஹன்வே ஜி30 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் இன்ஜின்தான். ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 24.3 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!