உலகளவில் ஷாட் வீடியோ செயலிக்கான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதேவேளையில், பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக டிக்டாக் செயலி இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறிய நிலையில், அமெரிக்க உட்படப் பல நாடுகளில் டிக்டாக் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் சீன சந்தையில் டிக்டாக் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான Kuaishou செயலி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, இந்நிறுவனம் டென்சென்ட் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் Kuaishou செயலியின் தாய் நிறுவனமான Kuaishou டெக்னாலஜி நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாளிலேயே மிகப்பெரிய உயர்வை அடைந்துள்ளது.
சீன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
ஆன்ட் குரூப் ஐபிஓ ஏமாற்றத்தில் இருந்து வெளிவராத சீன பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு Kuaishou டெக்னாலஜி நிறுவனத்தின் ஐபிஓ பெரும் லாபத்தை அளித்துள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே இந்நிறுவனப் பங்குகள் சுமார் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது சர்வதேசச் சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Kuaishou செயலி Kuaishou
டெக்னாலஜி நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் சுமார் 5.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் 115 ஹாங்காங் டாலர் விலையில் பங்குகளை விற்பனை செய்தது. ஐபிஓ திட்டத்தின் போதே இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தடாலடி வளர்ச்சி
இந்நிலையில் வெள்ளிக்கிழமை Kuaishou டெக்னாலஜி பட்டியலிடப்பட்ட நிலையில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 345 ஹாங்காங் டாலர் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 115 டாலரில் இருந்து 345 டாலர் வரையில் உயர்ந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
159 பில்லியன் டாலர்
இந்த ஐபிஓ மூலம் Kuaishou டெக்னாலஜி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஹாங்காங் டாலர் மதிப்பில் 1.23 டிரில்லியன் டாலராகவும், அமெரிக்கா டாலர் மதிப்பில் 159 பில்லியன் டாலர் ஆகவும் உயர்ந்துள்ளது.
ஹாங்காங் சந்தை
ஹாங்காங் பங்குச்சந்தையில் சீன நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடச் சீன அரசு அனுமதி வழங்கிய பின்பு, பல முன்னணி நிறுவனங்கள் ஹாங்காங் சந்தையில் பட்டியலிட முன்வந்துள்ளது. ஆனால் ஐபிஓ-வில் முதலீடு செய்யச் சீன ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அனுமதி இல்லை. பங்குச்சந்தைக்கு வந்த பின்பு தான் முதலீடு செய்ய முடியும்.
சீன ரீடைல் முதலீட்டாளர்கள்
இதன் காரணமாகவே ஐபிஓ வெளியீட்டுக்குப் பின்பு சீன முதலீட்டாளர்கள் Kuaishou டெக்னாலஜி பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து இந்நிறுவனப் பங்குகளை 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடையச் செய்துள்ளனர். ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடும் புதிய நிறுவனங்களுக்குச் சீன ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான டிமாண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment