நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில் பெரும் லாபம் - மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு

கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த ஒன்பது புதிய பெரும் பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 1.41 லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒன்பது புதிய பணக்காரர்களை தவிர, இந்தத் துறையில் ஏற்கனவே உள்ள எட்டு பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களில் 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. 


இந்த பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் மாடெர்னா நிறுவனத்தின் ஸ்டீபன் பேன்செல் மற்றும் பையாண்டெக் நிறுவனத்தின் உகுர் சஹின் ஆகிய இருவரும் உள்ளனர். சீனத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான கான்சினோ பையோலாஜிக்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய மூவர் இந்த பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளனர். 

தடுப்பூசிகள் தயாரிப்பில் ஏகபோக உரிமை பெற்று, பெரும் லாபம் அடைவதை அனுமதிக்கக் கூடாது என்று ஆக்ஸ்பேம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அன்னா மேரியாட் கூறுகிறார். தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை ரத்து செய்து, உலகில் யார் வேண்டுமானாலும் அவற்றை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, தென் ஆப்பரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!