இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தி, சமீபத்தில் இந்தியா சாதனை புத்தகத்தில் நுழைந்தவர்கள்.
‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்பது தொடர் சாதனைகள் படைத்து வரும் மனிதர்கள் மற்றும் புதிய சாதனைகளை முறியடிக்க விரும்புபவர்களிடையே புகழ்பெற்றது. தங்கள் திறமைகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றவர்களிடம் இது கின்னஸ் சாதனை புத்தகம் போல இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
இது அவர்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்குகிறது. சாதனையாளர்கள் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும், அவர்கள் சிறந்த வெற்றியை நோக்கி செல்லவும் அவர்களுக்கு வெற்றிகரமாக வழிகாட்டுகிறது.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின் கீழ், பின்வரும் பாராட்டுக்களும் சாதனை பதிவுகளும் இடம் பிடித்துள்ளன.
இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தி, சமீபத்தில் இந்தியா சாதனை புத்தகத்தில்(இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) நுழைந்தவர்கள்.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸின் புதிய திறமைசாலிகள் சிலர் உங்கள் பார்வைக்காக:-
1. இரண்டு வயது குழந்தை ஒன்று வழக்கத்தை விட முன்னதாகவே திறன்களைக் வெளிக்காட்டி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தீஷாங்க் மல்லிகார்ஜுனா எஸ், ஜூன் 25, 2020 அன்று கர்நாடகாவின் சிவமொகாவில் பிறந்தவர். அவர் பிறந்து 1 வருடம் மற்றும் 7 மாதமே ஆன நிலையில், அவர் இந்த இளம் வயதிலியேயே 5 பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளித்ததற்காக பாராட்டப்பட்டுள்ளார்.
மேலும், 14 வடிவங்கள், 11 வண்ணங்கள், 39 விலங்குகள், 16 வாகனங்கள், 20 நாடுகளின் கொடிகள், உடலின் 11 பாகங்கள், 18 காய்கறிகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காக அவர் பாராட்டப்பட்டுள்ளார். வாரத்தின் நாட்கள் மற்றும் ஒரு வருடத்தில் உள்ள மாதங்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வாசிப்பதற்காகவும் பாராட்டப்பட்டுள்ளார். ஆங்கிலத்தில் 1-20 மற்றும் கன்னடத்தில் 1-10 வரையிலான எண்கள் மற்றும் 4 நர்சரி பாடல்கள் ஆகியவற்றை வாசித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
2. நியான்ஷ் எஸ், ஜூலை 2, 2020 அன்று பெங்களூருவில் பிறந்தவர். அவர் பிறந்து 1 வருடம் மற்றும் 8 மாதங்களே ஆன நிலையில், 20 பழங்கள், 13 பூக்கள், 19 செயல் வார்த்தைகள், 19 காய்கறிகள், 24 தொழில்கள், 13 வடிவங்கள், 22 வாகனங்கள், உடலின் 25 பாகங்கள், 21 விலங்குகள், 12 வண்ணங்கள், 6 எலக்ட்ரானிக் பொருட்கள், 17 பறவைகள், 10 ஆடைகள்,24 நாடுகளின் மருத்துவ பொருட்கள் மற்றும் கொடிகள், என அடையாளம் காட்டியதற்காக அவர் பாராட்டப்பட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
3. சுஜன் குருராஜ் அக்டோபர் 5, 2012 இல் பெங்களூருவில் பிறந்தவர். அவர் பிறந்து 9 வயது, 4 மாதங்களே ஆன நிலையில், 44 வார்த்தைகளை பின்னோக்கி உச்சரித்து அசத்துகிறார். 25 வார்த்தைகளை பின்னோக்கி உச்சரித்தும், 6 வாக்கியங்களை பின்னோக்கிப் பேசியதற்காகவும் அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

4. ‘ஸ்னேக் க்யூப்ஸ்’ மூலம் அதிகபட்ச வடிவங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் திஜுவர்தன் பத்ரிநாத். அவர் நவம்பர் 24, 2013 இல் கர்நாடகா மாநிலம் பல்லாரியில் பிறந்தவர்.
அவர் பிறந்து 7 வயது, 10 மாதங்களே ஆன நிலையில், ஸ்னேக் க்யூப்ஸ் மூலம் ராக்கெட், பந்து, வாள் என ஆறு வடிவங்களை ஒரே நிமிடத்தில் உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
5. ஒரே நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பற்றிய அதிகபட்ச கேள்விகளுக்கு பதிலளித்ததற்கான சாதனை அமேயா பிரதீஷ் படைத்துள்ளார். அவர் கேரளாவின் ஆலப்புழாவில் டிசம்பர் 25, 2016 அன்று பிறந்தவர். அவர் பிறந்து 5 வயது, 2 மாதங்களே ஆன நிலையில், ஒரு நிமிடத்தில் அவர் 39 கேள்விகளுக்கு பதிலளித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
6. ஆர்யன் சவுத்ரி உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் ஜூலை 10, 2006 இல் பிறந்தவர். சர்வதேச பத்திரிகைகளுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதற்காக இவர் பாராட்டப்படுகிறார். இளம் வயதிலேயே அதிக சர்வதேச பத்திரிகைகளுக்கு 11 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
7. டாக்டர். ரித்தேஷ் சின்ஹா மார்ச் 30, 1974 இல் ஹரியானா, கர்னால் நகரில் பிறந்தார். பெருமூளை வாதம் உள்ளவர்களுக்காக ‘ரித்தேஷ் முத்ரா’ என்ற பெயரில் ‘கை முத்ராவை’ உருவாக்கியதற்காக அவர் பாராட்டப்படுகிறார். இத்தனைக்கும் அவரும் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
பெருமூளை வாதம் கொண்ட நபர்களுக்காக ஸ்பேஸ்டிசிட்டி, எச்சில் வடிதல், நடை மற்றும் தன்னார்வ சிறுநீர் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த முத்ராவை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
8. சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள் மூலம், விளம்பரப் பலகைகளில் அதிகபட்ச சூரிய சக்தியை உற்பத்தி செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை ஜெஸ்ட் எண்டர்பிரைஸ், மும்பை படைத்துள்ளது.
17 பகுதிகளில் 11,675 சதுர அடி பரப்பில், சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள் நிறுவி, அதன்மூலம் இந்திய ரெயில்வே துறைக்கு சுத்தமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
9. வேகமாக கற்கும் குழந்தை
தமிழ்நாட்டை சேர்ந்த வி.பி. வர்ஷிதா ரெட்டி செங்கல்பட்டில், ஆகஸ்ட் 16, 2017 இல் பிறந்தவர்.
அவர் பிறந்து 4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களே ஆன நிலையில், சிறு வயதில், 12 விலங்குகள், 11 பறவைகள், 14 தொழில்கள், 21 செயல்கள், 12 பிரபலமான ஆளுமைகள், 16 வாகனங்கள், 1-27 முதல் எண்கள், உடலின் 24 பாகங்கள், 35 பொதுப் பொருட்கள், இந்திய நாணயத்தில் அச்சிடப்பட்ட 15 மொழிகள், அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காக அவர் பாராட்டப்படுகிறார்;
ஒரு வருடத்தில் உள்ள மாதங்கள், 4 பருவங்கள், 20 தேசிய சின்னங்கள் மற்றும் 10 ரைம்ஸ்களை ஒப்பித்ததற்காகவும் அவர் பாராட்டப்படுகிறார்.
5 வயதுக்குள்ளாக இத்தனை விஷயங்களை செய்து அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
10. டைனோசர்களின் இனங்களை அடையாளம் காட்டும் குழந்தை
அதிகபட்ச டைனோசர் இனங்களைக் கண்டறிந்த சாதனையை சென்னையைச் சேர்ந்த விதுன் வி.எம் பெற்றுள்ளார். அவர் ஆகஸ்ட் 11, 2020 இல் பிறந்தவர்.
அவர் பிறந்து 1 வருடம், 6 மாதங்களே ஆன நிலையில், 5 நிமிடங்கள் 32 வினாடிகளில், படங்களைப் பார்த்து 66 வகையான டைனோசர்களை அடையாளம் கண்டு அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
Comments
Post a Comment