நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத பாம்பை பொம்மையாக்கி விளையாடிய குழந்தைகள்…. விழிபிதுங்க வைத்த அதிர்ச்சி காட்சி!

 குழந்தைகள் மலைப்பாம்புடன் விளையாடு காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அவர்களிடம் துளியும் பாம்பு என்ற அச்ச உணர்வையே காண முடியவில்லை.

ஒரு பொம்மையுடன் விளையாடுவதை போல, இவர்கள் பாம்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான குழந்தைகள் பாம்பை சூழ்ந்துகொண்டு அதை தொட்டுப்பார்த்து, ஆசையுடன் தடவிக் கொடுக்கிறார்கள். 

வீடியோவில் காணப்படும் பாம்பு அனகோண்டாவாக இருந்தாலும் சரி, மலைப்பாம்பாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆபத்தானவைதான். 

எனவே குழந்தைகளை எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்று வீடியோவை பார்ப்பவர்கள் அறிவுரை கூறிவருகின்றனர்.



ALSO READ : சாப்பிட ஆர்டர் செய்த மீனுக்கு திடீர்னு உயிர் வந்த அதிர்ச்சி…. உறைந்து போன கஸ்டமர்

Comments

Popular posts from this blog