நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெயில்கால நோய்களை விரட்டி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டுமா?

 கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும்.


மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது.

அப்போது உடலைக் குளிர் வைக்க ஒரு சில பானங்களை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.  


10- 15 புதினா இலைகளுடன் ஒரு கப் தயிர் சேர்த்து, சிறிது சர்க்கரை மற்றும் வாசனை பிடித்தால் சிறிது ஏலக்காய் பொடியும் சேர்த்து பிளண்டரில் அடித்து எடுத்தால் புதினா லஸ்ஸி ரெடி. சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். புதினாவை வெயிலில் உலர்த்தி அதை தனியே டப்பாவில் அடைத்து வைத்துக் பயன்படுத்தி கொள்ளலாம். 

சந்தனம் இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அதனுடன் இலவங்கப்பட்டையும் எலுமிச்சையும் சேர்ப்பதால் சுவையும் அதிகமாகும். இது கொளுத்தும் வெயில் காலத்தில் உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க மிகப் பொருத்தமானது.

விளாம்பழம் கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். இதிலுள்ள அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஜீரணத்தை மேம்படுத்தி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை வராமல் தடுக்கிறது.    

நன்னாரி இந்த வேரை பயன்படுத்தி, சர்க்கரையுடன் சேர்த்து சிரப் போல செய்து வைத்துக் கொள்ளலாம். ரெடிமேடாகக் கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, எலுமிச்சை சாறும் ஜில்லென்று ஐஸ் சேர்த்து இந்த சிரப் கொஞ்சம் சேர்த்தால் ஜில் ஜில் நன்னாரி சர்பத் ரெண்டே நிமிடத்தில் தயார். 



ALSO READ : அன்றாட உணவில் கீரைகளின் பங்கு


Comments

Popular posts from this blog