வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றை தவிர்த்து சமூக வலைத்தளங்களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.அறிவை விரிவு செய்யவும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளை தெரிவிக்கவும், பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும் என சமூக வலைத்தளங்களின் நன்மைகள் ஊஏராளம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தலைமுறையை சேர்ந்தவர்களும், இன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்தகிறார்கள்.
இதில் நிறைய பேர் ஒரு கட்டத்துக்கு மேல் சமூக சலைத்தளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக அதில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றை தவிர்த்து சமூக வலைத்தளங்களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
கவன ஈர்ப்பு என்பதே பலரையும் சமக வலைத்தளங்களுக்கு அடிமையாக மாற்றுகிறது. எனவே அவற்றில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? எதற்காக உபயோகப்படுத்துகிறீர்கள்- இதனால் உங்களது மற்ற வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்கிறதா? என்பதைகவனித்து பாருங்கள். அதை பொறுத்து முடிவு எடுங்கள்.
மேலே சொன்னபடி செய்தும் சமூக சலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை என நினைத்தால் ஒரு நாளில் நீங்கள் அவசியம் முடிக்க வேண்டிய செயல்களை உங்களுக்கு நினைவுபடுததுவதற்கான செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த செயலி சரியான நேரத்தில் உங்கள் அலுவல்களை குறித்து நினைவுப்படுத்தும். இதன் மூலம் நீங்கள் சமூக வரைத்தளங்களை உபயோகிக்கும் நேரத்தை குறைத்து உங்கள் பணிகளை செய்ய முடியும்.
தற்போது சமூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கான இடம் என்பதையும் தாண்டி சுயதொழில் செய்யும் நவீன தளமாகவும் மாறி வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் பெண்களுக்கு ஏற்ற எளிதான வியாபாரத்தளமாக பல சமூக சலைத்தளங்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. எனவே நீங்கள் எதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறறீர்கள் எவ்வாறு அதை கையாளுகிறீர்கள் என்பதை கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பயன்படுத்த வேண்டும்.
உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால் அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
முன்பே சொன்னது போல சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, கவன ஈர்ப்பு களமாக மாறும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகிறோம். எனவே வலைத்தளங்களில் உங்களுக்கு வரும் கவன ஈர்ப்புகள் நிஜமாகவே உங்களை மேம்படுத்திக்கொள்ளவதற்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறதா? என்பதை உணர்ந்து கவனத்துடன் கையாளுங்கள்.
Comments
Post a Comment