நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்......

 இங்கிலாந்தின் மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் காளான்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மரங்களிலும், செடிகளிலும் உயிர்கள் இருப்பது பல  ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. விலங்குகளும் பரஸ்ரம், அவைகளுக்கான சொந்த மொழியில் பேசிக் கொள்கின்றன.

இந்நிலையில், இப்போது  வெளிவந்துள்ள ஒரு புதிய ஆராய்ச்சியில், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. காளான்கள் தங்களுக்குள் பேசும் போது 50 வார்த்தைகளை பயன்படுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை பேராசிரியர் ஆண்ட்ரூ அடமட்ஸ்கி மேற்கொண்டுள்ளார். இந்த ஆராய்ச்சியின் போது, ​​நான்கு வகையான பூஞ்சைகளின் மின்சார செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது. காளான்களின் மின் தூண்டுதல்கள் மனித மொழியைப் போலவே இருப்பதும் அவற்றில் பல சொற்கள் இருப்பதும் தெரியவந்தது.

இந்த ஆய்வு ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. காளான்கள் மற்றும் மனிதர்களின் மொழி ஒன்றல்ல என்று சொல்லப்பட்டாலும், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.  காளான் அகராதியில் 50 வார்த்தைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ கூறுகிறார். அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்குள் பேசுகிறார்கள். ஏனோகி (enoki), ஸ்பிலிட் கில் (enoki), கோஸ்ட் (ghost) மற்றும் கேட்டர்பில்லர் பங்கி (caterpillar fungi) ஆகிய காளான்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

காளான்கள் தங்களுக்குள் எதைப் பற்றி பேசுகின்றன என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. வானிலை மற்றும் வரவிருக்கும் ஆபத்துகள் பற்றி பரஸ்பரம் தெரிவிப்பதற்காக காளான்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. எனினும் இதற்கு அதிக ஆராய்ச்சி தேவை  என்றும், மின்சார செயல்பாட்டை ஒரு மொழியாக கருதுவது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 


ALSO READ : இதுதான் பேய் சுறாவா? கடலில் இருந்து கிடைத்த அரிய வகை உயிரினம்....

Comments

Popular posts from this blog