நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டுவிட்டரில் புதிய அம்சம் - விரைவில் திருத்தம் செய்யும் வசதி அறிமுகம்!

 டுவிட்டரில் டுவீட் செய்த பின்னர், அந்த பதிவை திருத்தி மாற்றம் செய்து பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்ய ஆராய்ந்து வருவதை டுவிட்டர் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

டுவிட்டரில் டுவீட் செய்த பின்னர், அதாவது பதிவை வெளியிட்ட பின், அந்த பதிவை திருத்தி மாற்றம் செய்து பதிவிடும் புதிய வசதியை  அறிமுகம் செய்ய ஆராய்ந்து வருவதை டுவிட்டர் நிறுவனம்  உறுதிசெய்துள்ளது.

டுவிட்டர் நிறுவனம் வரும் மாதங்களில் இந்த  யோசனையை சோதனை முறையில் செயல்படுத்தி சோதிக்கத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

பல பயனர்கள் எடிட் வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்,  அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய கவலை டுவிட்டர் நிர்வாகிகளிடம் இருந்து வந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், “கடந்த ஆண்டு முதல், எடிட்(திருத்தம் செய்யும்) வசதியை கொண்டுவருவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். வரும் மாதங்களில்,  ‘டுவிட்டர் ப்ளூ’ பயனாளர்களுக்கு இந்த வசதி முதலில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தன்று, இந்த அதிகாரப்பூரவ் தகவல் வெளியானதால் அதனை பார்வையாளர்கள் நம்பவில்லை. பின்னர் இது பொய்யல்ல உண்மை தான் என்று தெரிய வந்தது.

ஒருவர் டுவீட் செய்து வெளியிட்ட பதிவை சில மணி நேரம் கழித்தும்,  அந்த பதிவில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின் மீண்டும் அந்த பதிவை வெளியிடலாம். இதனால் முன்னதாக அந்த பதிவிற்கு கிடைத்த லைக் மற்றும் ரீடுவீட்டு போன்றவை மாறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்த டுவிட்டர் அம்சம். பாதுகாப்பான முறையில் இந்த புதிய அம்சத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நிறுவனம் ஆராய்ந்து கொண்டிருந்தது” என்று  டுவிட்டர் நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்பு பிரிவின் துணைத் தலைவர், ஜே சல்லிவன் தெரிவித்தார். 
மேலும் அவர் கூறுகையில், “திருத்தப்பட்ட பதிவுகள் குறித்த வெளிப்படைத்தன்மை, ஒரு பதிவு எப்போது எடிட் செய்யப்பட்டது என்பன போன்ற அம்சங்கள் இல்லாவிடில், பொதுவெளியில் என்ன கலந்துரையாடுகிறோம் என்பதை சிலர், எடிட் அம்சத்தை உபயோகப்படுத்தி தங்கள் பதிவுகளை மாற்றம் செய்து தவறாக பயன்படுத்தக்கூடும். அந்த பொது உரையாடலின் நேர்மையைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது” என்றார்.

டுவிட்டரின் 9.2% பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளுக்கு உரிமையாளராக, உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். இதனையடுத்து சமீபத்தில் தான் அவர் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

எலோன் மஸ்க், சமீபத்தில் டுவிட்டர் வாக்கெடுப்பின் மூலம், டுவிட்டரில் தன்னைப் பின்தொடர்பவர்களிடம் இந்த அம்சம் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். பெரும்பாலானோர் புதிய வசதி வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர். 
இந்த வாக்கெடுப்பை கவனமாக வாக்களிக்கவும். ஏனெனில் அதன் பின் ஏற்படும் விளைவுகள் முக்கியமானதாக இருக்கும் என்று டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி  பராக் அகர்வால் தெரிவித்தார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைவதற்கு முன்பே அந்நிறுவனம் எடிட் அம்சம் குறித்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இப்போது எலான் மஸ்க், டுவிட்டரின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்த பிறகு, அந்த பணிகளை முடுக்கி விட்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.



Comments

Popular posts from this blog