நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google Mapல் ராட்சத பாம்பின் எலும்புக்கூடு! உண்மையில் இது என்ன தெரியுமா?

 கூகுள் மேப்பின் மூலம் பிரான்சில் ராட்சத பாம்பின் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.


ராட்சத பாம்பின் எலும்புக்கூடு

@googlemapsfun எனப்படும் TikTok கணக்கில் வெளியான வீடியோவே வைரலாகி வருகிறது.

இதில் கூகுள் வரைபடத்தை ஆராயும் போது அவர்கள் கண்டறிந்த சில விசித்திரமான விஷயங்களை பதிவிடுவது வழக்கம்.

அப்படி கடந்த 24ம் தேதி பிரான்ஸ் கடற்கரையில் எடுக்கப்பட்ட வீடியோவில் ராட்சத பாம்பின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுத்தீயாய் பரவிய வீடியோ 

இது உண்மையில் 30 மீட்டர் நீளம் மற்றும் இதற்கு முன் பிடிபட்ட எந்தப் பாம்பையும் விட பெரியதாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அழிந்துபோன டைட்டனோபோவா(அனகோண்டா பாம்பின் இனம்) இருக்கலாம் என்ற வதந்தி கிளம்பியது. 

இந்த வீடியோ டிக்டோக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானதும் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.


உண்மை என்ன?

இது பாம்பு தானா என சோதனை செய்ததில், "Le Serpent d'Ocean என்று அழைக்கப்படும் ஒரு பெரிய, உலோக சிற்பம் என்பது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த பாம்பின் எலும்புக்கூடு சிற்பம் பிரான்சின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது மற்றும் 425 அடி நீளத்தில் இது உள்ளது.

Estuaire கலைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக Le Serpent d'Ocean 2012 இல் இது வெளியிடப்பட்டது என்று இணையத்தள தகவல் தெரிவிக்கிறது.


இது சீன-பிரெஞ்சு கலைஞர் ஹுவாங் யோங் பிங் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று அட்லஸ் அப்ஸ்குரா தெரிவிக்கிறது. முடிவில், கூகுள் மேப்ஸில் காணப்படும் 'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் ஒரு கலைப்படைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!