நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

AI வழிகாட்டுதலில் கேக் தயாரித்த யூடியூப் சமையலர்... டேஸ்ட் எப்படி இருக்கு தெரியுமா?

 சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் யூ டியூபர் Ann Reardon என்பவர் இந்த ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் துணை கொண்டு சமையல் முயற்சியை மேற்கொண்டார்.


தொழில்நுட்ப உலகில் மேம்பட்டதாகக் கருதப்படும் ‘ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ என்ற வார்த்தையை நம்மில் பலர் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், அது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்று அதன் முழுமையான பயன்பாடு குறித்து நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் பயன்பாடு எல்லையில்லாத ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கும்.

உதாரணமாக, அமேசான் நிறுவனத்தின் ‘அலெக்ஸா’ வை எடுத்துக் கொண்டால், வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கும். உங்களோடு உரையாடுவது, கதை அல்லது கவிதை சொல்வது, பாட்டு பாடுவது என இதன் பயன்பாடுகள் குறித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ மூலமாக பார்த்திருப்பீர்கள்.

சமையல் குறிப்பு வழங்கும் ‘ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்’

OpenAI என்ற நிறுவனம் மேம்படுத்தியுள்ள ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் கருவி ஒன்று சமையலுக்கான குறிப்புகளை வழங்குகிறது. சமையலில் மனிதர்கள் செய்யும் தவறைப் போலவே, இதுவும் சில தவறுகளை செய்வதைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு சமையல் ரெசிஃபியில் ‘கம்’ பசை சேர்க்க வேண்டும் என்ற அறிவுரையை இது வழங்கியிருக்கிறது.

சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் யூ டியூபர் Ann Reardon என்பவர் இந்த ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் துணை கொண்டு சமையல் முயற்சியை மேற்கொண்டார். முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதாவது, மெஷின் சொன்னபடி சமைத்து முடித்ததில், அந்த ரெசிஃபிக்கள் சாப்பிட முடியாத அளவுக்கு மோசமாக வந்து விட்டன.

ஓரியோ கேக் தயாரிப்பு

சற்றும் மனம் தளராத ஆன் ரியார்டன், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் உதவியுடன் மூன்றாவது ரெசிஃபியை தயாரிக்க முயற்சித்தார். அதாவது ஓரியோ கேக் தயாரிப்பது எப்படி என்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தது அந்த மெஷின்.

சமையல் குறிப்புகளை சொல்வதற்கு முன்பாகவே, “இது நல்ல டேஸ்ட்டாக இருக்கும். சுமார் 20 பேர் வரையில் சாப்பிடலாம்’’ என்று முன்னுரையுடன் தொடங்குகிறது மெஷின். அதற்குப் பிறகு எத்தனை ஓரியோ பிஸ்கட் எடுக்க வேண்டும், வெண்ணெய் எவ்வளவு எடுக்க வேண்டும் என்ற பட்டியல் தொடர்கிறது.

மெஷின் சொன்னபடி அனைத்து இடு பொருட்களையும் சேர்த்து சுவையான கேக்கையும் தயாரித்து முடித்தார் ஆன் ரியார்டன். இறுதியாக அவரும், அவரது கணவரும் இணைந்து அந்த கேக்-ஐ சுவைத்தனர். இவர்களது மகனும் கூட கேக் சாப்பிட்டார். மூவரும் சாப்பிட்டதில், கேக் சுவை பெரிய அளவுக்கு மோசமில்லாமல், ஓரளவுக்கு நன்றாக வந்திருக்கிறது என்று அவர்கள் ரிவியூ கொடுத்தனர்.


சமைக்க தெரியாது என்ற கவலை இனி தேவை இல்லை

நம்மில் பலருக்கு சமைக்கத் தெரியாது என்ற கவலை இருக்கும். இனி அது தேவையில்லை. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் மெஷின் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் விரும்பிய ஒன்றை எப்படி சமைக்க வேண்டும் என்பதற்கு அதுவே வழிகாட்டி விடும். ஆர்வம் இருப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.



ALSO READ : ரூ.230 கோடிக்கு ஏலத்திற்கு போக தயாராக உள்ள உலகின் மிகப்பெரிய ஒயிட் டயமண்ட்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!