போலி மெயில் ஜாக்கிரதை… பேஸ்புக், ட்விட்டர் அனுப்பும் ஒரிஜினல் மெயிலை கண்டறிய சில டிப்ஸ்......
- Get link
- X
- Other Apps
பேஸ்புக் நிர்வாகி, ட்விட்டர் நிர்வாகி என போலி மெயில் மூலம் பணம் திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதலிருந்து தப்பிக்கும் வழிமுறையை இங்கே காணலாம்.
பேஸ்புக், ட்விட்டர் உட்பட பல நிறுவன ஊழியர்கள் என்கிற போர்வையில், தனிப்பட்ட நபர்களுக்கு போலியான மெயில்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த மெயில்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பெறும் நோக்கத்திலும், ஆபத்தான வெப்சைட்களுக்கு மாற்றும் லிங்க்-களை கொண்டிருக்கலாம். எனவே, இன்றைய செய்தி தொகுப்பில், போலி மெயில்களை கண்டறியும் டிப்ஸ்களை காணலாம்
மெயிலை ஒப்பன் செய்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்பதை கூகுள் தரப்பில் வீடியோவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இது, போலி மெயில்களை அடையாளம் காண உதவும்.
ட்விட்டர்
ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு டோமைன்கள் வாயிலாகவே வரக்கூடும். இந்த டோபைன் இல்லாமல் வேறு ஐடியில் ட்விட்டர் நிர்வாகி என மெயில் வந்தால், அது போலியானது ஆகும். அந்த மெயிலை உடனடியாக டெலிட் செய்துவிட்டு, அனுப்பிய நபரை பிளாக் செய்துவிடுங்கள். குறிப்பாக, இத்தகைய போலி மெயிலிகளில் வரும் பைல்களை டவுன்லோடு செய்யாதீர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மெயில்கள் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய டோமைன் வாயிலாக தான் வரக்கூடும். இதுதவிர வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என யாரெனும் தொடர்பு கொண்டால், அது நிச்சயம் சிக்கல் தான். முடிந்தவரை அந்த மெயிலை ஓபன் செய்யதாதீர்கள். தவறுதலாக திறந்துவிட்டாலும், அதில் வரும் லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்
LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டுமே வரக்கூடும். ற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என்கிற போர்வையில் தொடர்புகொள்ள வாய்ப்புள்ளது. உங்களுக்கு செல்போன் அல்லது கணினிக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்யவும் அறிவுறுத்தலாம்.
மெயில் கவனிக்க வேண்டியவை
- பயனர் பெயர், பாஸ்வேர்டு
- சமூக பாதுகாப்பு நம்பர்
- வங்கி நம்பர்
- PIN நம்பர்
- கிரெடிட் கார்டு நம்பர்
குறிப்பு: உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களது பிறந்த நாள் போன்றவை பொது விவரங்கள் கிடையாது. இத்தகைய விவரங்கள் கேட்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.
ALSO READ : உங்கள் சாதனத்தின் ஐபி முகவரியை கண்டறிவது ரொம்ப ஈஸி… ஸ்டெப்ஸ் இதோ.......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment