நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

50 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2 கோடிக்கு ஏலம் போன சாண்ட்விச்சிற்கு ஈடாக கிடைத்த ஓவியம்!

 கனேடிய ஜோடிக்கு சுவையான சீஸ் க்ரில்டு சாண்ட்விச்சுக்கு ஈடாக ஓவியர் மவுட் லூயிஸ் வரைந்த கனட நாட்டு ஓவியம் கிடைத்தது.

ஒரு சுவையான சீஸ் க்ரில்டு சாண்ட்விச்சுக்கு ஈடாக நீங்கள் எதை கொடுக்க தயாராக இருப்பீர்கள்? அதிகபட்சம் கொஞ்சம் பணம் கொடுப்பீர்கள், குறைந்தபட்சம் அதை வாங்கி கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூறுவீர்கள். ஆனால் ஒரு அதிர்ஷ்டசாலி கனேடிய ஜோடிக்கு சுவையான சீஸ் க்ரில்டு சாண்ட்விச்சுக்கு ஈடாக ஒரு ஓவியம் கிடைத்தது மற்றும் அந்த ஓவியம் அவர்களுக்கு எக்கச்சக்கமான பணம் கிடைக்க வழிவகுத்துள்ளது.

கடந்த  வார செவ்வாய்கிழமை நடந்த ஒரு ஓவிய ஏலத்தில், ஓவியர் மவுட் லூயிஸ் வரைந்த கனட நாட்டு ஓவியம் ஒன்று 270,000 டாலர்களுக்கு (அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.2 கோடிக்கு மேல்) விற்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவியத்தின் தற்போதைய உரிமையாளர்கள், முதலில் அந்த ஓவியத்தை எப்படி, எவ்வாறு கைப்பற்றினர் என்பது தான் இங்கே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ஆகும். இந்த கனேடிய தம்பதியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு க்ரில்டு சீஸ் சாண்ட்விச்களுக்கு ஈடாக லூயிஸின் இந்த ஓவியத்தை பெற்றுள்ளனர்.

அந்த நேரத்தில் (50 ஆண்டுகளுக்கு முன்) ஓவியத்தின் தற்போதைய உரிமையாளர் ஆன ஐரீன் டெமாஸ், தனக்கும் தன் மனைவிக்கும் சொந்தமான ஒரு உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்துள்ளார். அவர்களின் உணவகத்தில் சாப்பிடும் அனைவருமே உணவுக்கு ஈடாக பணம் கொடுத்து வந்த நிலைப்பாட்டில், ஒரே ஒரு சாண்ட்விச் பிரியர் மட்டும் உணவுக்கு ஈடாக பணம் செலுத்தாமல் ஓவியங்களை ஈடாக கொடுப்பாராம்; அவர் ஓவியர் ஜான் கின்னியர் ஆவார்!


ஹோட்டல் நடத்தும் கனேடிய தம்பதிக்கும் ஓவியர் ஜான் கின்னியருக்கும் இடையே அப்படி ஒரு "ஒப்பந்தம்" இருந்தது. ஜான் கின்னியர் தான் உண்ணும் உணவிற்கு பதிலாக தான் வரைந்த அல்லது தன் நண்பர்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் பணம் செலுத்துவாராம். இப்படியாக 1973ல் ஓவியர் கின்னியர் உணவருந்த வந்திருந்த போது, ​​அவர் தனது நெருங்கிய நண்பரான மவுட் லூயிஸின் சில ஓவியங்களையும் தன்னுடன் கொண்டு வந்துள்ளார். அப்போது கின்னியருக்கு க்ரில்ட்டு சீஸ் சாண்ட்விச் பரிமாறப்பட்டுள்ளது மற்றும் அதற்கு ஈடாக மிகவும் பிரபலமான "பிளாக் டிரக்" ஓவியம் கொடுக்கப்பட்டுள்ளது.

5 தசாப்தங்களாக டெமாஸின் வீட்டில் தொங்கவிடப்பட்டு இருந்த லூயிஸின் "பிளாக் டிரக்" ஓவியம் இப்போது அதன் மதிப்பை விட 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வழக்கமான வரலாறுகளை போலவே, ஓவியர் லூயிஸ் தான் வாழ்ந்த காலத்தில் எந்த புகழையும் எட்டவில்லை. கனடாவின் நோவா ஸ்கோடியாவில் சாலையோரத்தில் தனது ஓவியங்களை விற்று வந்த அவர் உயிருடன் இருந்தபோது அவரின் எந்த ஓவியமும் எந்த விதமான விமர்சனப் பாராட்டையும் பெறவில்லை. அவர் 1970ல் மறைந்தார். அவர் இறந்த பல தசாப்தங்களுக்குப் பிறகே அவர் புகழ் பெற்றார். 2016 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மவுடி’ என்கிற திரைப்படம் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்