எடையை வேகமாகக் குறைக்கும் பிரிஞ்சி இலை நீர்! இப்படி எடுத்து கொண்டாலே போதுமாம்......
- Get link
- X
- Other Apps
பிரிஞ்சி இலை, தேஜ் பட்டை, பிரியாணி இலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவின் சுவை கூடுவது மட்டுமல்ல , சில ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுவது உண்டு.
இந்த இலையை உணவில் மட்டுமல்லாது, இதனை கொதிக்க வைத்து அருந்துவதனாலும் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.
இதில் ஒரு கைப்பிடி அளவுக்கு (10 -15) இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 2 நிமிடங்கள் நன்கு கலக்கி விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறிது தேன் சேர்த்து டீ போலவும் குடிக்கலாம். அவ்வப்போது லேசாக சூடேற்றி வெதுவெதுப்பாகவும் குடிக்கலாம்.
ஆற வைத்து விட்டு தண்ணீர் தாகம் எடுக்கும்போது இந்த நீரை குடித்து வரலாம். இது வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யும்
நன்மைகள்
- வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
- உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.
- மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் வேலையை செய்கிறது.
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- மூச்சுக்குழாய் தொடர்புடைய பிரச்சினைகளில் இருந்து தீர்வு தருவதோடு சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment