மஞ்சளின் தனித்துவம்......
- Get link
- X
- Other Apps
விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
இந்திய சமையலில் மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் குர்குமின் ஆன்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது.
சாதாரண மஞ்சளில் 3 முதல் 5 சதவீதம் குர்குமின் நிரம்பியிருக்கும். ஆனால் மேகாலயாவின் ஜெயந்தியா மலைகளில் வளர்க்கப்படும் லக்கடாங் மஞ்சள் அதிக குர்குமின் உள்ளடக்கம் கொண்டதாக அறியப்படுகிறது.
அதில் 12 சதவீதம் குர்குமின் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது உலகின் மிகச்சிறந்த மஞ்சள் வகைகளில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது. ஜெயந்தியா மலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமத்தில் இந்த வகை மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது மற்ற மஞ்சள் வகைகளை விட அதிக சுவையும், பிரகாசமான நிறமும் கொண்டது. அதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
டிரினிட்டி சாஜூ என்ற பெண் இந்த மஞ்சள் சாகுபடியை பிரபலப்படுத்தினார். அவரை பின்பற்றி ஏராளமான விவசாயிகள் லக்கடாங் மஞ்சளை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த மஞ்சள் சாகுபடிக்காக 2020-ம் ஆண்டு டிரினிட்டி சாஜூ பத்மஸ்ரீ விருது பெற்றார்.
மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படும் மஞ்சளுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. புற்றுநோயைக்கூட குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கிறது.
சளித்தொல்லை, மூக்கடைப்பு, ஜலதோஷம் ஏற்பட்டதும் மஞ்சளுடன் சுண்ணாம்பு சேர்த்து ஒரு கரண்டியில் வைத்து லேசாக சூடாக்கி பொறுக்கும் சூட்டில் நெற்றி, மூக்குப்பகுதியில் தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.
விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளித்தொல்லையின்போது மஞ்சளைத் தீயில் சுட்டு சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும். சாம்பிராணி புகையில் மஞ்சள்தூளைப் போட்டு அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினால் கிருமிகள், சிறு பூச்சிகள் ஒழியும்.
பச்சை மஞ்சள் புற்றுநோயை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக இதிலுள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். அதேவேளையில் இதிலுள்ள குர்க்குமின் என்ற ரசாயனப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாவதற்குக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி படைத்தது.
பாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து அருந்தும் வழக்கம் பலரிடையே உள்ளது. நெஞ்சுச்சளியால் அவதிப்படுபவர்கள் பாலுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிட்டு அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment