நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரமிக்க வைக்கும் Optical Illusion லுக்ஸ்கள்.! அசாத்திய திறமையால் வைரலாகி வரும் மேக்கப் ஆர்டிஸ்ட்.....

 டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவர் ஷேர் செய்து உள்ள சில ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் போட்டோக்களில் உள்ள ஒரு சில மேக்கப்களை உருவாக்க 12 மணி நேரம் வரை பிடித்ததாக கூறி இருக்கிறார் எஸ்தர்.


  ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை சில நேரங்களில் நம் கண்களையும், மூளையையும் ஒருசேர ஏமாற்றக்கூடியவை. சமீப நாட்களாக சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன் போட்டோக்கள் மற்றும் பெயிண்டிங்ஸ் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் வைரலாகி வருகிறது.


மனதைக் கவரும் பல வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் மூலம், கொலம்பியாவின் பொகோட்டாவில் வசிக்கும் 29 வயதான மேக்கப் ஆர்டிஸ்ட் எஸ்தர் அவுலர் (Esther Aular) சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகி உள்ளார். வெனிசுலாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த திறமையான மேக்கப் ஆர்டிஸ்ட் எஸ்தர், நம்பமுடியாத ஆப்டிகல் இல்யூஷன் தோற்றத்துடன் வைரலாக மாறியுள்ளார்.


டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவர் ஷேர் செய்து உள்ள சில ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் போட்டோக்களில் உள்ள ஒரு சில மேக்கப்களை உருவாக்க 12 மணி நேரம் வரை பிடித்ததாக கூறி இருக்கிறார் எஸ்தர். இவர் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து உள்ள போட்டோக்களில் சிங்கம், கோழி உள்ளிட்ட விலங்குகள் முதல் ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் Lord Of The Rings-ல் வரும் கோல்லம் கேரக்டர் என பெரியது முதல் சின்ன சின்ன கேரக்டர்கள் வரை இருக்கிறது. மேலும் ஒரே முகத்தில் பல கண்கள் இருப்பது, முகத்தில் பல கண்கள், வாய், மூக்கு இருப்பது உள்ளிட்ட பல விசித்திரமான ஆப்டிகல் இல்யூஷன் சார்ந்த மேக்கப்பையும் போட்டு அசத்தி நெட்டிசன்களை மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறார்.


இவர் ஷேர் செய்துள்ள மேலும் சில ஆப்டிகல் இல்யூஷன் போட்டோ மற்றும் வீடியோக்களில் ஒரு நீலப் புலி முதல் கோரைப்பற்கள் கொண்ட விசித்திரமான அசுர முகம் வரை பலவும் அடக்கம்.


தனது மேக்கப் பற்றி பேசி உள்ள எஸ்தர், எனது மேக்கப் டைப் சர்ரியலிசம் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் உள்ளிட்டவை ஆகும். நான் முயற்சித்து பார்க்கும் பெரும்பாலான லுக்ஸ்களை முழுவதுமாக மேக்கப் போட்டு முடிக்க 4 முதல் 6 மணிநேரம் ஆகும். ஆனால் ஒரு சில நேரங்களில் அது 8 முதல் 12 மணி நேரமாக நீளும். ஆனால் இது எனது கலை. இதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நான் வாழ்கிறேன். எனவே வித்தியாசமான மேக்கப் யோசனைகளை உருவாக்குவது எனக்கு எளிதானதே என்று கூறி உள்ளார்.


கடும் முயற்சி எடுத்து வித்தியாசமான மேக்கப் லுக்ஸ்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும் எஸ்தர் அவுலருக்கு நாளுக்கு நாள் ஃபாலோயர்ஸ் பெருகி கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.




ALSO READ : பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்