நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?

 ஒருவர் ஒருநாளில் எத்தனை மணிநேரம் தூங்குகிறார் எவ்வளவு நன்றாக தூங்குகிறார் என்பதையே ’தூக்க சுகாதாரம்’ (Sleep hygiene) என்று வரையறுக்கின்றனர். 


ஒருவருக்கு உடல் சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்க சுகாதாரமும் மிகமிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.


செய்யவேண்டியவை:


தினசரி வேலைகளை அட்டவணையிடுங்கள். இது தூக்க நேரத்தை கணக்கிடவும், தினசரி அதை வழக்கமாக்கவும் உதவும்.

கெமோமில் தேநீர், லாவெண்டர் தேநீர் போன்ற ஹெர்பல் தேநீர்களை அருந்துங்கள். இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

உடல் சௌகர்யம் தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே படுக்கைக்கு செல்லும்போது தளர்ந்த சௌகர்யமான ஆடைகளை அணியுங்கள். படுக்கைகளை சரிசெய்யுங்கள். தூங்கும் இடத்தை தொந்தரவுகளின்றி வையுங்கள்.


செய்யக்கூடாதவை:


பகல் மற்றும் மாலைநேரத்தில் தூங்குவதை தவிர்த்திடுங்கள். இது இரவு தூக்கத்தை பாதிக்கும்.

தூங்கப்போவதற்கு 4-5 மணிநேரத்திற்கு முன்பு கஃபைன் பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி செய்துமுடித்தவுடனோ அல்லது உணவு சாப்பிட்ட உடனோ படுக்கைக்கு செல்வதை தவிர்க்கவும்.



ALSO READ : தரையில் தூங்குவதால் வரும் நன்மைகள் தெரியுமா?...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!